வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன்!

Sunday, June 07, 2009

தமிழ் வலைப்பூக்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறதா?

அன்பான தமிழ் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்!தமிழ் வலைப்பூக்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறதா? என்ற எண்ணம் சில நாட்களாக எழுந்து விட்டது!

தமிழ் வலைப்பூக்களில் சினிமா, Cut, Copy,Paste போன்றவைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது!
வாசகர்களிடம் படைப்புகளுக்கு முக்கியத்துவம் குறைந்து விட்டதை தமிழிஷ், தமிழ்மணம், தமிழர்ஸ் போன்ற திரட்டிகளில் வரும் வாக்குகள் மூலம் தெளிவாகிறது.



நான் தமிழிஷில் வலைப்பூக்களை படித்துகொண்டிருக்கும் போது எனது நண்பர்கள் பார்த்தார்கள். அதில் வந்த வலைப்பூக்களின் உள்ளடக்கத்தை பார்த்து விட்டு தமிழ் வலைப்பூக்களின் மீது வேறு மாதிரியான விமர்சனங்களை வைத்தார்கள்.

சில கருத்துக்களை ஏற்று கொள்ளவேண்டியிருந்தது.

இப்போது தமிழ் வலைப்பூக்களை அவர்கள் முன்னால் திறப்பது கொஞ்சம் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு நான் ஆக்கப்பூர்வமாக உபயோகப்படுத்தப்படும் வலைப்பூக்களை காட்டினேன். பலனில்லை!

விளைவு! இந்த பதிவு!!

என்னைப்பொறுத்தவரை ஆக்கப்பூர்வமகவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது! என்று கருதுகிறேன்!.

உங்களது எண்ணங்களை இந்த வாக்குகள் மூலம் தெரிவியுங்கள்.

உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டமிடுங்கள்!

நன்றி!!

5 comments:

Anonymous said...

பாலாஜி உங்களது கருத்துகள் மிக சிறந்தது,

தமிழ்ர்ஸ் தொடர்ந்து நல்ல கருத்துகளையும் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டு மேன் மேலும் சிறப்பாக பதிவர்களுக்கு உதவ வேண்டும் என்று உழைக்கிறோம்

மேலும் ஏதெனும் நல்ல யோசனைகள் இருந்தால் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் நாங்கள் அது குறித்து ஆலோசித்து நடைமுறை படுத்துவோம்

உங்களது கருத்துகளுக்கு நன்றி

தமிழர்ஸ்.காம்

Balaji G said...

நன்றி! தமிழ்ர்ஸ்!

// மேலும் ஏதெனும் நல்ல யோசனைகள் இருந்தால் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் நாங்கள் அது குறித்து ஆலோசித்து நடைமுறை படுத்துவோம் //

நிச்சயமாக!

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் இணைத்துவிட்டேன்!

Anonymous said...

இல்லை.

aalunga said...

உங்களுடன் இது குறித்து கருத்தில் வேறுபடுவதற்காக வருந்துகிறேன்..

கணிணியை நன்றாக பயன்படுத்த தெரிந்த, நல்ல படைப்பாளிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.அவற்றில் அவற்றில் பதிவு எழுதுபவர் எத்தனை பேர்?

பதிவு எழுத ஆர்வம் மட்டுமே தேவை.
படைப்பாற்றல் இரண்டாம் பட்சம் தான்!!

ஆர்வம் உள்ளவர் மட்டுமே பதிவிடுகிறார். படைப்பாற்றல் உள்ளவர்கள் தங்கள் படைப்புகளை இடுகிறனர். மற்றவர்களோ தங்களால் இயன்ற வரை முயல்கிறார்கள். அவ்வளவு தான்!

சொந்தமாய் படைப்பவர்கள் தான் பதிவிட வேண்டும் என்று நினைத்தால் வலைப்பூ உலகில் சுவையான பழங்கள் உடைய மரங்கள் மட்டுமே இருக்கும். ஆனால், மறுபுறம் வறட்சி நிலவும்!

ஒரு படைப்பை ஏற்றுக் கொள்ளும் உரிமை வாசகனுக்கே உண்டு.. வாசகன் தான் அன்னம் போல் பாலையும் நீரையும் பிரித்து அறிய வேண்டும்!!

எனவே, பதிவிடுவது அவரவர் விருப்பம். ஒருவர் அவர் விரும்பியதைப் பதிவிடலாம்! வாசகர்கள் அவற்றை ஏற்றுக் கொள்கிறார்களா என்று பார்ப்போம்!

Balaji G said...

// பதிவு எழுத ஆர்வம் மட்டுமே தேவை.
படைப்பாற்றல் இரண்டாம் பட்சம் தான்!! //

இது உண்மை தான்.

ஆனால் பொழுது போக்கிற்கு பயன்பட்டுத்துபவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
ஆனால் ஒரு வரைமுறையே இல்லாமல் கடுஞ்சொற்களை பயன்படுத்தி எழுதுவோர் அதிகம். அதனால் தான் இப்பதிவு.
இப்போது இது குறைந்திருக்கிறது.

Popular Posts