இன்று படித்து முடித்தவுடனே இளைஞர்கள் சென்னையை நோக்கி வேலைக்காக படையெடுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் பொறியியல் பட்டம் பெற்றவர்கள். அவர்களின் எதிர்காலம், குடும்ப சூழ்நிலை போன்ற காரணங்களுக்காக இங்கு வந்து எப்படியும் ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் பலர்.
இதில் சாப்ட்வேர் துறையில் வேலை தேடுவோருக்கு பெரும்பாலும் பிரச்சனையில்லை. அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்புகள் இருக்கிறது. துறை சார்ந்த அறிவும், ஆங்கில பேச்சு திறமையும் இருந்தால் பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்து விடும். அப்படியே இல்லை என்றாலும் சிறிய நிறுவனத்தில் சில ஆண்டுகள் இருந்தால் அதன் பிறகு அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்து கிடக்கிறது.
இதுவே மற்ற (மின்னியல், இயந்திரவியல்) துறை சார்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் மிக மிக குறைவு. மிகச்சிலரே நல்ல நிறுவனத்தில் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். மற்றவர்கள் வேலை தேடித்தேடி சோர்ந்து போய் எதாவது வேலை கிடைத்தல் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு SSI என்றழைக்கப்படும் சிறு நிறுவனங்களில் நுழைகின்றனர்.
இப்பதிவு அவர்களுக்காகத்தான்.
சென்னையை பொறுத்த வரையில் SSI கம்பனிகளுக்கு பஞ்சம் இல்லை. இவர்கள் மாணவர்களை மிக குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கமர்த்தி விட்டு வேலை வாங்குவதில் வல்லவர்கள். இவர்களுக்கு இந்த Domain இல் வேலை என்றெல்லாம் கிடையாது. எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். இங்கு பெரும்பாலும் அதிக நாட்களுக்கு யாரும் வேலை செய்ய மாட்டார்கள். அந்த அளவிற்கு செயல்படுவார்கள். எனவே பெரும்பாலான SSI நிறுவனங்களில் பட்டயம் மற்றும் ITI படித்தவர்களே இருப்பார்கள்.
பொறியியல் பட்டதாரிகள் வேலைக்கு சேரும்போது அவர்களிடம் அவர்களின் பட்ட படிப்பு சான்றிதல்களையும் கேட்ப்பார்கள். முடியாது என்றால் வேலை கிடையாது என்று சொல்வார்கள். வேலைக்காக சான்றிதழை கொடுத்து விட்டால் அவ்வளவு தான்!.
நீங்கள் அவர்களின்அடிமை!
நிகழ்வு 1 :
சில மாதங்களுக்கு முன்பு எனது நண்பர் இதுபோல் கொடுத்துள்ளார்.
இத்தனைக்கும் வேலை முன் அனுபவம் உள்ளவர்.
"நல்ல வேலை. நல்ல எதிர்காலம். தகுந்த சம்பளம். இரண்டு வருடம் bond . PLC programmer வேலை. சான்றிதல்களை கொடுக்க வேண்டும்"
நண்பர் பல தடவை யோசித்து விட்டு வேளையில் சேர்ந்தார்.
Offer Letter இல் பொத்தாம் பொதுவாக Application Engineer என்று போட்டு இருந்தார்கள். கேட்டதற்கு எல்லோரையும் போல சப்பை கட்டு கட்டியிருக்கிறார்கள். சான்றிதழ் வாங்கியதற்கான ஆதாரமும் இல்லை. சான்றிதல் நகலில் ' Certificate Received ' என்று மட்டும் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.
நாட்கள் சென்றன. கம்பெனியில் எல்லா வேலைகளையும் செய்திருக்கிறார் நண்பர் PLC ப்ரோக்ராம் தவிர்த்து. அடிமை போல் நடத்தியிருக்கிறார்கள். மெக்கானிகல் வேலையெல்லாம் வாங்கியிருக்கிறார்கள். பல்லை கடித்துக்கொண்டு இருந்திருக்கிறார்.
அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற நபர்களுக்கோ நாகரீகமாக கூட பேச தெரியவில்லை. லோக்கல் பாஷையில் பேசியிருக்கிறார்கள். நல்ல Professional Environment இல்லை. அதும் பிடிக்க வில்லை அவருக்கு.
சில மாதங்களுக்கு பிறகு நடப்பது நடக்கட்டும் என்று உடனே வேலையை விட்டு நின்று விட்டார். பிறகு அலுவலகத்திலிருந்து பல முறை கூப்பிட்டார்கள். முடியாது என்று சொல்லி விட்டார் நண்பர்.
பிறகு சான்றிதழ் வேண்டுமென்றால் மூன்று மாத சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். நண்பர் வெகுண்டு போராடிப்பார்த்தார். அவர்கள் பெரிய அப்பா டக்கர் மாதிரி பேசிவிட்டு வைத்து விட்டார்கள். நண்பர் இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார்.
விவரம் தெரிந்தவர்கள் முடிந்தால் வழி காட்டலாம்.
நிகழ்வு 2 :
குறிப்பிட்ட துறையில் பல வேலை வாய்ப்புகள் இருப்பதாக இணையத்தில் நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுத்து பலரை வருவித்திருக்கிறார்கள் எதோ பெயர் கொண்ட அந்த நிறுவனத்தினர். பல Freshers, Experience நபர்கள் வந்திருக்கிறார்கள்.
பெயரளவிற்கு சில வினாக்களை கேட்டு விட்டு வெட்டு பின்புலத்தையும் அறிந்து விட்டு
"உங்களுக்கு துறை சார்ந்த அறிவு குறைவாக உள்ளது. இது எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய ஏதுவாயிருக்காது. எனவே நாங்களே உங்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். இதற்கு நீங்கள் 2500 ரூபாய் கட்ட வேண்டும். அதன் பிறகு எங்கள் நிறுவனத்தில் வேலைக்கமர்த்திக்கொள்கிறோம்"
இந்த மாதிரி ஏமாற்றும் கும்பலும் இருக்கிறது. தீர விசாரித்து பார்த்ததில் அவர்கள் தொழிற் பயிற்சி கொடுக்கும் நிறுவனத்தினர். நேர்முகத்தேர்வு என்ற போர்வையில் கொள்ளை அடிக்கின்றனர்.
சில அறிவுரைகள்:
1 . எக்காரணத்தைக்கொண்டும் மாணவர்கள் அவர்களது சான்றிதல்களை SSI
1 . எக்காரணத்தைக்கொண்டும் மாணவர்கள் அவர்களது சான்றிதல்களை SSI
போன்ற சிறு நிறுவனங்களிடம் கொடுத்து விட வேண்டாம்.
(பெரிய நிறுவனங்கள் பெரும்பாலும் இது போன்ற செயல்களில்
(பெரிய நிறுவனங்கள் பெரும்பாலும் இது போன்ற செயல்களில்
ஈட்டுபடுவதில்லை)
2 . நேர்முகத்தேர்வு என்ற பெயரில் பணத்தை கொள்ளையடிக்கும் கும்பலிடம்
2 . நேர்முகத்தேர்வு என்ற பெயரில் பணத்தை கொள்ளையடிக்கும் கும்பலிடம்
ஒதுங்கியே இருங்கள். உங்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சி அளிக்க மிக
சிறந்த பல பயிற்சி நிறுவனங்கள் உள்ளது. அதை பயன்படுத்துங்கள்.
சிறந்த பல பயிற்சி நிறுவனங்கள் உள்ளது. அதை பயன்படுத்துங்கள்.
நேர்முகத்தேர்வுக்கு வரவைத்து உங்களின் பலவீனத்தை பயன்படுத்தி
ஏமாற்றுவர்களை நம்பிவிடாதீர்கள்.
3 . அதேபோல் consultancy என்ற பெயரிலும் கொள்ளை நடக்கிறது. கவனம்!
ஏமாற்றுவர்களை நம்பிவிடாதீர்கள்.
3 . அதேபோல் consultancy என்ற பெயரிலும் கொள்ளை நடக்கிறது. கவனம்!
(சில விதிவிலக்குகளும் உண்டு)
4 . மின்னியல் மற்றும் இயந்திரவியல் துறையை பொறுத்த வரை Bulk Requirement என்பது மிக மிக மிக குறைவு. இதுபோல Bulk Requirement என்று அழைக்கும்
consultacy , நிறுவனங்களிடம் அதிக கவனம் தேவை!

8 comments:
1. give a compliant in CM cell and send the copy to them.
2. go univercity and get a duplicate copy
தகுந்த நேரத்தில் ஒரு முக்கியமான பதிவை எழுதி இருக்கிறீர்கள்..
வாழ்த்துக்கள்!!
மாணவர்கள் விழிப்புடன் இருந்தால் தான் அவர்கள் எதிர்காலமும் விழிப்பாய் இருக்கும்!
@ Anonymous
தகவலுக்கு நன்றி!
//தகுந்த நேரத்தில் ஒரு முக்கியமான பதிவை எழுதி இருக்கிறீர்கள்..
வாழ்த்துக்கள்!! //
@ அருண்!
நன்றி அருண்!
// மாணவர்கள் விழிப்புடன் இருந்தால் தான் அவர்கள் எதிர்காலமும் விழிப்பாய் இருக்கும்! //
நிச்சயமாக!
பாலாஜி...உங்களுடன் உரையாடியதில் மகிழ்ச்சி...
முற்றிலும் உண்மை
எந்த துறையும் விதிவிலக்கல்ல, நாம்தான் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நல்ல விழிப்புணர்வு பதிவு.
புதிதாக வேலைக்குப் போகும் மாணவர்களுக்கான பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி.
Post a Comment