வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன்!

Thursday, July 07, 2011

நீயா? நானா? - கோபிநாத் - ஒரு கசப்பான உண்மை!

இன்று நீயா நானா நிகழ்ச்சி பற்றியும் அதை தொகுத்து வழங்கும் கோபிநாத் பற்றியும் ஒரு விரிவான அலசல் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை சொல்லி மீடியாக்களின் போக்கு பற்றி கவலைப்பட்டிருந்தார் ஒரு நண்பர்.

தங்கள் அணியினருக்கு கவனமாக பலமுறை வாய்ப்பு மறுக்க பட்டதாகவும் ஒருதலை பட்சமாக பேசுவதாகவும் சொல்லியிருந்தார். சில இடங்களில் நிகழ்ச்சி பற்றியும், கோபிநாத் பற்றியும் வசை பாடப்பட்டிருந்தது.


அப்பதிவிற்கு மொத்தம் 47 பின்னூட்டங்கள். ஆச்சர்யமாக இருந்தது! அத்தனை பின்னூட்டங்களும் அப்பதிவிற்கு சாதகமாகவே இருந்தது. ஒரு பின்னூட்டம் கூட மாற்று கருத்து கொண்டதாக இல்லை. யாருமே மாற்று கருத்து சொல்லவில்லையா? அல்லது மாற்று  கருத்து சொல்லப்பட்டவர்கள் கவனமாக தவிர்க்கப்பட்டர்களா?

பொதுவாக இன்றைய தொலைக்காட்சி ஊடகங்களை பொறுத்த வரை துளியும் சம்பந்தமே இல்லாமல் ஏதாவது ஒரு பெயரை வைத்துக்கொண்டு அடிக்கும் கூத்துக்களோடு ஒப்பிடும் போது விஜய் டிவியின் நீயா? நானா? எப்பவுமே டாப் தான்.
 
சமூகம் சார்ந்த கருத்துக்களை விவாதிக்கும் போது ஒவ்வொருவரும் கூறும் கருத்துக்களையே மனதில் கொள்ள வேண்டும். இரண்டு அணியினரிடமும் இருந்து கூறப்படும் சாதக பாதக அம்சங்களை தெரிந்து கொள்ளலாம். நமது பேச்சு திறனையும் சிந்திக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ளலாம். அதை விடுத்து எந்த அணி சிறந்தது என்று  பார்த்து கொண்டிருக்கக்கூடாது. இது அதற்கான நிகழ்ச்சியும் இல்லை.

சில விளக்கங்கள்:

  • விஜய் டிவியின் நீயா? நானா? “பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா?”, பெண்களின் கூந்தலில் இருப்பது உண்மையான மயிரா?, போலி மயிரா?” என்பது போன்ற பொருள் பொதிந்த மயிர் பிளக்கும் விவாதங்களே அதிகம் ஒலி/ளி பரப்பியிருப்பதாக அறிகிறேன். - பதிவர்.

அனைவரும் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும். நீயா? நானா? நிகழ்ச்சி ஒன்றும் சமூக மாற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செய்யப்படும் நிகழ்ச்சி இல்லை. புதிய சிந்தனைகளை உள்ளடக்கி அனைத்து தரப்பு மக்களையும் கவருவதற்காகவும் ஒளி பரப்பப்படும் நிகழ்ச்சியே. இதில் பல்வேறு தலைப்புகளை கொண்டு விவாதம் நடத்தப்படுவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

மேற்கூறிய தலைப்புகளில் எத்தனை நிகழ்சிகளை பார்த்தீர்கள்?

  • நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் என்பவர் பல்வேறு கருத்துகள் மக்களை சென்றடைய செய்யும் திறன் வாய்ந்தவராக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களோ மக்களை மடையர்களாகவும், தங்களை நாயகர்களாகவும் நினைக்கின்றனர்.- பதிவர்.
  • மக்களின் வாழ்க்கை போன்ற முக்கியமான பிரசினைகளை உங்கள் நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்து மக்களுக்கு தவறான தகவல்களை தருவதற்கு பதில், உங்கள் வழக்கமான பாணியில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா?” கூந்தல் இயற்கையானதுதானா?” என்பது போன்ற தலைப்புகளிலேயே விவாதம் நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்!. - பதிவர்.
  • நீயா? நானா? நிகழ்ச்சி முட்டாள்கள் மட்டுமே பார்ப்பது. கோபிநாத் அவர்களில் மிகப்பெரிய முட்டாள். - பின்நூட்டமிட்டவர்களில் பலர்.
  • எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரி எடுத்து நிகழ்ச்சியை டக்கென முடித்து விடுவார். - பின்னூட்டம்.
கோபிநாத்தை பொறுத்த வரை அவர் ஒரு எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், மிக சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், சிறந்த மேதை என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை. பதிவர் நண்பர் யாரை மனதில் கொண்டு சொன்னார் என்பது தெரியவில்லை.

நண்பர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் காணொளியை பார்த்தேன். இரு அணியினருக்கும் விவாதங்கள் சரியாகவே நடந்தது. ஒரு தலை பட்சமாக நடந்து கொண்டதாக தெரியவில்லை. விஷயங்கள் தெரிந்தவர், பேச்சு திறமை மிக்கவர் அதிகம் பேசுகிறார். அவ்வளவே!

( நண்பர் நிகழ்ச்சியின் பெரும் பகுதி முன் வரிசையில் அமர்ந்து கொண்டு காலை மட்டுமே ஆட்டிக்கொண்டிருந்தார். பேசவும் முற்படவில்லை. இறுதி வரை அவர் பேசினாரா? இல்லையா? என்பதே தெரியவில்லை )
 
இவர் எதை வைத்துக்கொண்டு வாய்ப்பு வழங்கப்பட்டவில்லை என்று கூறுகிறார் என்பதும் தெரியவில்லை.

இந்த மாதிரியான டாக் ஷோ வில் நேரத்தை கடத்தாமல் உரிய நேரத்தில் நிறுத்தி அப்படியே சமாளித்து முட்டித்து வைக்கும் திறனும் வேண்டும்.
அந்த (தேவையான) இடங்களில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் இருப்பதில் தவறேதும் இல்லை.

பின்னூட்டம் மட்டுமே இடும் நாம், எதுவுமே பேசாமல் முன்வரிசையில் அமர்ந்து கொண்டு காலை மட்டுமே ஆட்டிக்கொண்டிருந்த நாமே நம்மை இவ்வவளவு அறிவாளிகளாய் பார்க்கும் போது, தொலை நோக்கு பார்வை கொண்ட, பேச்சாற்றல் மிக்க, தொகுப்பாளரான அவரும் அறிவாளியாகத்தான் இருப்பார் என்றே நினைக்கறேன்.

குறிப்பு 1:
கோபிநாத் பெற்ற விருதுகள்:
  1. American Government Invitation to participate in International Visitors Programme (2004)
  2. Young International award by "India Today" Magazine (2007)
  3. Best Anchor of the State by "ஆனந்த விகடன்" (2007,2008)
  4. Invited for the International Health Conference, Sydney (2007)
  5. Outstanding Young Indian by Junior Chamber International(JCI)(2008) 
இவ்விருதுகள் சாதாரண குப்பனுக்கோ அல்லது சுப்பனுக்கோ கொடுத்துவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

குறிப்பு 2:
தனி மனித தாக்குதலோ அல்லது யார் மனதையும் புண் படும் நோக்கத்தோடோ எழுதவில்லை.
கோபிநாத் மீதான, நீயா? நானா? மீதான தாக்குதலுக்கு கொடுத்த சிறு விளக்கமே!


25 comments:

vidivelli said...

nalla pathivu..
valththukkal..can you come my said?

Anonymous said...

இது கோபிநாத்தே வந்து எழுதினாப்பிலே தெரியுது !

அது சரி, எந்தப்பதிவைச்சொல்றீகளோ அதுக்கு லிங்க் கொடுத்தா நான் அவா சொல்றது சரியா இல்லே நீங்க சொல்றது சரியான்னு தெரிஞ்சுப்பேன்.

Anonymous said...

பதிவின் பெயர் வடிவமைப்பு எல்லாம் நன்றாகயிருக்கிறது. கங்கிராஜு;லேசன் சார்.

Anonymous said...

நல்ல பதிவு பாலாஜி...எனக்கு கோபி ரொம்ப பிடிக்கும்...

யார் வேணாலும் கீபோர்ட்க்கும் மௌசுக்கும் பின்னால ஒளிஞ்சு என்னவேணாலும் எழுதலாம்...நாலு பதிவு போட்டவுடனே மமதை தலைக்கேறிப்போயிருது...

நூறு பேருக்கு முன்னாடி நின்னு சரளமா பேசறதே ஒரு தனிக்கலை...ஒரே ஒரு குறை தான் அவரிடம்..இன்னும் கொஞ்சம் தமிழ் உச்சரிப்ப மெருகேத்தலாம்...குறிப்பா...நிறைவு செய்கையில் 'ந' ...'ண'...

Anonymous said...

நான் சமீபத்தில்தான் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறேன். இது வரை ஒரு பதினைந்து நிகழ்ச்சிகள் பார்த்திருப்பேன். கோபிநாத் மிகச் சிறந்த வகையிலே இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் என்பதிலே துளியும் சந்தேகம் இல்லை. மூன்று மாதத்திற்கு முன் "உங்கள் வாழ்க்கைத் துணியை விட நீங்கள் எவ்வகையில் சிறந்தவர்?" என்ற தலைப்பில் கணவர்கள் ஒரு புறமும் மனைவிகள் ஒரு புறமும் வைத்து கோபிநாத் நிகழ்ச்சி நடத்தினார். ஒரு கணவர் ரொம்பவும் தன் மனைவியை மட்டம் தட்டுவது போல் பேசினார் (ஆர்வக் கோளாறுதான் அவருக்கு. நல்ல மனிதராகவே தெரிந்தார்). கோபிநாத் மிகச் சிறந்த வகையிலே அவருக்கு அவர் தவறை அறிவுறுத்தி நிகழ்ச்சியை தடம் புரளாமல் சமயோசிதத்துடன் செயல்பட்டார். இந்த கேசில் கூட அவர் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல செயல் படவில்லை. தப்பிதமாகப் பேசிய கணவருக்கு பல சான்ஸ் கொடுத்துவிட்டு கடைசியில்தான் அவரைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.

Gujaal said...

ஆமாங்க. கோபிநாத் மாதிரியான அறிவுஜீவியை ஒதுக்குவது தப்புதாங்க.

அப்புறம் அந்த லிங்க்கு?

பாலாஜி!!! said...

@ விடிவெள்ளி
நன்றி விடிவெள்ளி. தங்கள் தளத்தை பார்வையிட்டேன்.

பாலாஜி!!! said...

@ சிம்மக்கல்
நன்றி சிம்மக்கல். இது எனது பார்வையே. இது போன்ற கோபிக்கு எதிரான பதிவுகள் நிறைய உள்ளது. வலை தளத்தில் தேடி படிக்கலாம். வீண் விவாதங்களை தவிர்ப்பதற்காவவே லிங்க் ஐ கொடுக்கவில்லை.

பாலாஜி!!! said...

@ சிம்மக்கல்
//பதிவின் பெயர் வடிவமைப்பு எல்லாம் நன்றாகயிருக்கிறது. கங்கிராஜு;லேசன் சார்.//


நன்றி சார்.

பாலாஜி!!! said...

@ Reverie
நன்றி!
// யார் வேணாலும் கீபோர்ட்க்கும் மௌசுக்கும் பின்னால ஒளிஞ்சு என்னவேணாலும் எழுதலாம்...நாலு பதிவு போட்டவுடனே மமதை தலைக்கேறிப்போயிருது //

அறிவாளிகளை மட்டம் தட்டி எழுதினால் அனைவரும் இவர்களை பெரிய அறிவாளிகள் என்று நினைத்து கொள்வார்கள் என்ற நினைப்பு போலும்!

// நூறு பேருக்கு முன்னாடி நின்னு சரளமா பேசறதே ஒரு தனிக்கலை //

நிச்சயமாக!

பாலாஜி!!! said...

@ Anonymous
நன்றி! தங்கள் கருத்தை ஆமோதிக்கின்றேன்.

பாலாஜி!!! said...

@ Gujaal

// ஆமாங்க. கோபிநாத் மாதிரியான அறிவுஜீவியை ஒதுக்குவது தப்புதாங்க //

நக்கலாக சொல்லுவது போல் தெரிகிறது?!
இருந்தாலும் பின்னூட்டத்திற்கு நன்றி!

Robin said...

நீயா நானா நல்லாதானே இருக்குது.
கோபிநாத் நன்றாக நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார்.

முனைவர்.இரா.குணசீலன் said...

இதுபோல பொதிகையிலும் நடைபெறுகிறது இதைவிட நன்றாகவே இருக்கிறது..


ஆனாலும் இதை எத்தனைபேர் பார்க்கிறார்கள்.

எல்லாம் விளம்பர உலகமாகிவிட்டது நண்பா.

thamizhan said...

naan unga katchi!aamaa pothikai-nnu sollraangale athu enge irukku?

ஊரான் said...

ஒரு நிகழ்ச்சி மக்களிடம் ஏற்படுத்தும் விளைவுகளை வைத்தே அந்நிகழ்ச்சியை மதிப்பிட வேண்டும். கோபிநாத்தின் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நடுத்தர மற்றும் மேட்டுக்குடியினரை மையமாக வைத்தே நடத்தப்படுகிறது. விஐய் தொலைக்காட்சியின் நோக்கம் தெளிவானது; வருவாயைத்தவிர வேறென்ன இருக்க முடியும்? அதற்காக 'திறமை வாய்ந்த' கோபிநாத்துகள் தேவைப்படுகிறார்கள். அவ்வளவே.

நீயா? நானா? பற்றிய மற்றொரு பதிவு:
பெண் மனம் பெரிதும் விரும்புவது தன் அழகையா? அறிவையா?
http://hooraan.blogspot.com/2011/07/blog-post.html

ஆளுங்க (AALUNGA) said...

"நீயா நானா" ஒன்றும் பட்டிமன்றம் அல்ல. அது ஒரு விவாத மேடை.
அனைவர் கூறும் கருத்துகளையும் உள்வாங்கி எவருக்கும் பங்கமில்லா தீர்ப்பை வழங்க வேண்டும். குறித்த நேரத்திற்குள் நிகழ்ச்சியை முடிக்க வேண்டும்!!

கோபிநாத் அவர்களைப் பொறுத்த வரை இப்பணியைத் திறம்படவே செய்கிறார்.

ஒரு பதிவர் மனமுடைந்து எழுதினார் என்பதற்காக அவர் செய்வது எல்லாம் தவறாகாது!

இராஜராஜேஸ்வரி said...

நடுநிலையான அலசல்.

Anuradhaateen said...

1.American Government Invitation to participate in International Visitors Programme (2004)
2.Invited for the International Health Conference, Sydney (2007)

இவை இரண்டும் விருதுகள் இல்லை. இவை இரண்டும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள விடப்பட்ட அழைப்புக்கள் அவ்வளவே.

OBC RESERVATION said...

He is biased

sp mani said...

nalla manthihar balajai

Jayadev Das said...

மிக நல்ல பதிவு நண்பரே. இன்றைக்கு உள்ள நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் நன்றாக சிந்திக்கக் கூடியவர், விஷயம் அறிந்தவர், டைமிங் சென்ஸ் உள்ளவர் என்று இன்னும் பல தகுதிகளை உடைய ஒரே ஒருத்தர் என்றால் அது கோபிநாத் மட்டும்தான். இவரையும் குறை சொல்லவும், அதை ஆதரித்தும் பின்னூட்டமிடும் ஒரு கோஷ்டி இருக்கிறார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது. இவர்களுக்கு காதுகள் இல்லாத குருடர்களா என்று கேட்கத் தோன்றுகிறது. சன் குழுமத் தொலைக்காட்சிகளில் வரும் தொகுப்பாளர்களைப் பார்க்கும் போது, இவர்களை எங்கேயிருந்துடா பிடிச்சிகிட்டு வந்தானுங்க என்று கேட்கத் தோன்றும். AR ரஹ்மான், ரஜினி போன்றவர்களை பேட்டி எடுக்கக் கூட இசை, நடிப்பு பற்றி ஒண்ணுமே தெரியாத மண்ணாங்கட்டிகளை அழைத்து வந்து போட்டிருந்தனர். உப்பு சப்பில்லாத கேள்விகளையே அவர்களும் கேட்டு வேருப்பேத்தினார்கள். அவனுங்க கையில மட்டும் கிடைச்சா, அப்படியே ரெண்டு கையிலும் தலை மயித்தைப் பிடிச்சு ஒரு உலுக்கு உலுக்கி, நாலு கும்மு கும்மலாம என்று தோன்றும். கோபிநாத் மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் எவ்வளவு அழாகாக நிகழ்ச்சியைக் கொண்டு போயிருப்பார் என்று நினைத்ததுண்டு. இதை விடக் கொடுமை, அந்த மதன் பாப் காமெடியில் வரும் காம்பியர் பொம்பிளை, தாங்க முடியாத கொடுமைகள். இவ்வளவு பணத்தை வச்சிருக்கும் அவனுங்க, இந்த விஷயத்தில் மட்டும் ஏன் கேவலமாக இருக்கிறார்கள் என்றும் தோன்றும். நல்ல பதிவு நண்பரே. நன்றி.

பாலாஜி said...

@Jayadev Das

யப்பா! இவ்வளவு ஆதங்கமா?

chan dran said...

Nooru peruku munnadi mike pidithu pesum kalaiyai vaithu than aayaram perai adimuddalakukirakal.Ithu indraiya naatin nilai.Intha vivathangaluku innum sirappana theervukalum vidupadupona konangalum undu.oru mani nerathil oru vivathathirku theervu kandaal manitharkalin problems-ku vegu viraIvil theervu kanalam.t.v. Shows entertainement-ku thevaiyana masalavaka irukum,irrukirathu .vazhkai(yai)ill nallabooksai padika neramillamal theervukalai aedrukolkerom.

saravana saran said...

கோபி நாத் உண்மையான தேசப்பற்றாளன்..இளைஞர்களுக்கு வழி காட்டி,சமுகவியலான்..

Popular Posts