வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன்!

Sunday, June 07, 2009

வலைப்பதிவர்களின் கனிவான கவனத்திற்கு !!!

அன்பான தமிழ் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்!நான் வலைப்பதிவுலகிற்கு புதியவன்!!

வலைப்பதிவு தொடங்கவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை!!

வலைப்பதிவை தொடங்குவதற்காக நான் பல நாட்களாக பல தமிழ் வலைப்பதிவுகளை தொடர்ந்து வருகிறேன். தமிழ் மொழியின் பெருமையை கண்டு வியந்தேன்!!

இங்கு நான் கண்ட இரண்டு விஷயங்கள் என்னை மிகவும் சங்கடப்படுத்தியது, வருத்தத்திற்கு உள்ளாக்கியது...


  • சில வலைப்பதிவுகளில் சில குறிப்பிட்ட பதிவிற்கான விவாதங்களில் விவாதங்கள் ஆரோக்கியமானதாக இல்லை. எல்லை மீறி காணப்படுகிறது... மாறி மாறி வசை பாடியிருப்பதை அறிய முடிந்தது... ஏன் இப்படி?

நமது படைப்புகளை, திறைமைகளை வெளிக்கொணர கிடைத்த வலைப்பதிவை ஏன் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தக்கூடாது?

நமது மாறுபட்ட கருத்தை ஏன் இவ்வாறு வெளிக்காட்ட வேண்டும்? தாய் மொழியில் உலகத்தமிழர்கள் அனைவரும் வலைப்பதிவில் நட்பு பாராட்டி வரும் வேளையில் இதன் மூலம் முகம் சுழிக்க வேண்டுமா?

  • சில வலைப்பதிவுகளில் குறிப்பாக மூத்த பதிவர்களின் சில வலைப்பதிவுகளில் கருத்துரை பகுதியில் பதிவிற்கான கருதுரையைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் உள்ளன!!! கருத்துரைப்பகுதியை சாட்டிங் எனப்படும் அரட்டை பகுதியாக பயன்படுத்தி வருகின்றனர்!!!

அதற்குத்தான் கூகிள் டாக், யாஹூ மேசென்ஜெர் என பல வசதிகள் உள்ளனவே?

இதில் வேதனை என்னவென்றால் மூத்த பதிவர்கள் இவ்வாறு செய்வதுதான்...

பதிவு நன்றாக இருந்து கருத்துரை படிக்கும் போது இவ்வாறு சாட்டிங் அரட்டை இருப்பதால் விவாதங்கள் கருத்துக்கள் தடை படுகிறது...

அக்கருத்து அனைவரிடமும் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது...

சிந்திக்க வேண்டும்!!!

1 comment:

Subash said...

வாழ்த்துக்கள் பாலாஜி.
கலக்குங்கள்

டெம்பனேட் பற்றி கேட்டிருந்தீர்கள்.
வேர்ட் பிரசிஙற்குத்தான் இந்த தளம். ஆனா உங்க பதிவு பிளாகரில் அருப்பதை இப்பதான் கவனித்தேன்.

பளாகரிற்கு டெம்ளேட் எனில் அந்த தளம் இல்லை. மெயில் அனுப்பினால் அட்டாச் பண்ணி அனுப்பிவைக்கிறேன்.

Popular Posts