வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன்!

Sunday, June 07, 2009

முதல் தீக்குச்சி !!!

அன்பான தமிழ் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்!

வலைப்பதிவை தொடங்கவேண்டும் என்ற எனது பல நாள் ஆசை நிறைவேறிவிட்டது!

பல நாட்களாக பல தமிழ் வலைப்பதிவுகளையும் பார்த்து பல தகவல்களை அறிந்து வலைப்பக்கத்தை வடிவமைத்து நமது வலைப்பதிவை அனைவரும் அறியப் பயன்படும் வலைதளங்களை பற்றி அறிந்து எப்படியோ வலைப்பதிவை தொடங்கியாயிற்று!

நாவல்களை படித்த, படிக்கும் பாதிப்பே என்னுள் எழுதும் ஆசையை உருவாக்கியது.

நன்றாக நினைவு இருக்கிறது!! ஏழாம் வகுப்பு படிக்கும் போது ஒரு ஞாயிறு அன்று எதேச்சையாக ஒரு நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்து முடித்த பின்புதான் புததகத்தை வைத்தேன். அவ்வளவு ஆர்வமாக இருந்தது. அன்றிலிருந்து எனக்கு நாவல் படிக்கும் ஆசை தொற்றிக்கொண்டது.

அந்த முதல் நாவல் " கண்ணோடு கலந்துவிடு ". நாவலாசிரியர் "க்ரைம் சக்கரவர்த்தி திரு. ராஜேஷ் குமார் " அவர்கள். ராணி முத்துவில் வெளிவந்தது.

அன்றிலிருந்து இன்று வரை அவரது பல நாவல்களை படித்திருக்கிறேன், படித்துக்கொண்டிருக்கிறேன்! க்ரைம் நாவலின் நிறந்தர வாசகன் ஆகிவிட்டேன். எனக்குள் எழுதும் ஆசை வளர்ந்திருந்தது பின்னாளில் தெரிந்தது.

ராஜேஷ் குமாரின் " எவரெஸ்ட் தொட்டு விடும் உயரம்தான் " நாவல் என்னக்குள் இருந்த எழுத்தாளனை வெளிக்கொணர்ந்தது. அந்நாவலில் கதை எழுவது எப்படி என்று அவ்வளவு அற்புதமாக சொல்லியிருப்பார். அவரின் முதல் சிறுகதை " பலி " உருவான விதம் பற்றியும் சொல்லியிருப்பார்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் சிறுகதைகளை எழுத தொடங்கினேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது எங்களது வகுப்பில் எனது மூன்று சிறுகதைகள் வாசிக்கப்பட்டது. பிறகு பத்தம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு கல்லூரி என பிஸி ஆகி அனைத்தும் தற்காலிகமாக நின்றுவிட்டது. சில நேரம் எழுத முயற்சி செய்ததுண்டு. ஆனால் க்ரைம் நாவல் படிப்பது மட்டும் தொடர்ந்துகொண்டிருந்தது.

இப்பொழுது மீண்டும் வலைப்பதிவு மூலமாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் கதை எழுதுவேன் என்று தோன்றவில்லை. என்னை பாதித்த, பாதித்துகொண்டிருகும் விஷயங்களைப்பற்றி எழுதுவேன் என்று நினைக்கிறேன்.

சமூக அக்கறை வளர்ந்ததற்கு ராஜேஷ் குமாரின் நாவல்களும் மிக முக்கிய காரணம்.

இனிவரும் பதிவுகளில் எனது மன வலிகள், உணர்வுகளைப்பற்றி எழுதப்போகிறேன்.

வலைப்பதிவிற்கு வந்த அனைவருக்கும் நன்றிகள் பல!

No comments:

Popular Posts