நான் பாலாஜி - என்னைப்பற்றி!
சாணார்பாளையம்!
ஈரோடு மாவட்டத்திலுள்ள, பவானி வட்டத்தில், மைலம்பாடி கிராமத்தில் உள்ள ஒரு குக்கிராமம் தான் இது!
அடிப்படை வசதியை தவிர வேறேதும் அவ்வளவாக எட்டிப்பார்க்காத, குடிசை வீடுகள் மட்டும் அதிகமாக எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும் ஊர்.
இந்த ஊரில் பிறந்த நான் தற்போது மின்னியல் துறை பொறியாளனாக இருக்கின்றேன்! ஊரின் மூன்றாவது (பொறியியல்) பட்டதாரி.
அப்பா ஈரோடு மஞ்சள் மண்டியில் கூலி தொழிலாளி. அம்மா டைலர், துணி பைகளை தைத்துக்கொண்டிருக்கிறார். இவர்களின் மேலுள்ள அன்பை வெளிப்படுத்த தெரியாமல் / முடியாமல் இருக்கும் நான். இதுதான் எனது குடும்பம்.
![]() |
பாலாஜி |
பள்ளி படிப்பை ஊரிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆரம்பித்து, அடுத்து மேல்நிலை படிப்பை மைலம்பாடி அரசினர் மேல்நிலை பள்ளியில் தொடர்ந்து, பொறியியல் பட்ட படிப்பை அரசு பொறியியல் கல்லூரியில் முடித்து அரசின் சலுகைகளை முழுமையாக பெற்றவன்.
நாவல்களை படித்த, படிக்கும் பாதிப்பே என்னுள் எழுதும் ஆசையை உருவாக்கியது.
நன்றாக நினைவு இருக்கிறது!! ஏழாம் வகுப்பு படிக்கும் போது ஒரு ஞாயிறு அன்று எதேச்சையாக ஒரு நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படிக்க படிக்க ஆர்வம் தொற்றிக்கொண்டது. முழு நாவலையும் படித்து முடித்த பின்புதான் புததகத்தை வைத்தேன். அன்றிலிருந்து எனக்கு நாவல் படிக்கும் ஆசை தொற்றிக்கொண்டது.
அந்த முதல் நாவல் " கண்ணோடு கலந்துவிடு ". நாவலாசிரியர் "க்ரைம் சக்கரவர்த்தி திரு. ராஜேஷ் குமார் " அவர்கள். ராணி முத்துவில் எப்போதோ வெளிவந்திருந்த அந்த நாவல் பல வருடங்களுக்கு பிறகு எனது கையில் கிடைத்திருந்தது.
நன்றாக நினைவு இருக்கிறது!! ஏழாம் வகுப்பு படிக்கும் போது ஒரு ஞாயிறு அன்று எதேச்சையாக ஒரு நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படிக்க படிக்க ஆர்வம் தொற்றிக்கொண்டது. முழு நாவலையும் படித்து முடித்த பின்புதான் புததகத்தை வைத்தேன். அன்றிலிருந்து எனக்கு நாவல் படிக்கும் ஆசை தொற்றிக்கொண்டது.
அந்த முதல் நாவல் " கண்ணோடு கலந்துவிடு ". நாவலாசிரியர் "க்ரைம் சக்கரவர்த்தி திரு. ராஜேஷ் குமார் " அவர்கள். ராணி முத்துவில் எப்போதோ வெளிவந்திருந்த அந்த நாவல் பல வருடங்களுக்கு பிறகு எனது கையில் கிடைத்திருந்தது.
ராஜேஷ் குமாரின் " எவரெஸ்ட் தொட்டு விடும் உயரம்தான் " நாவல்
என்னக்குள் இருந்த எழுத்தாளனை வெளிக்கொணர்ந்தது. அந்நாவலில் கதை எழுவது
எப்படி என்று அவ்வளவு அற்புதமாக சொல்லியிருப்பார். அவரின் முதல் சிறுகதை " பலி " உருவான விதம் பற்றியும் சொல்லியிருப்பார்.
படிக்கும் ஆர்வம் வர எனது பெற்றோர் தான் முக்கிய காரணம்.அப்பா ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் போன்ற புத்தகங்களையும், அம்மா ராணி, ராணி முத்து போன்ற புத்தகங்களையும் படிப்பார்கள். நானும் படிக்க துவங்கினேன்.
இன்று வரை சுமார் 800 க்கும் மேற்பட்ட ராஜேஷ் குமார் நாவல்களை படித்து முடித்திருக்கிறேன். அத்தனை புத்தகங்களையும் இன்றுவரை பாதுகாப்பாகவும் வைத்திருக்கின்றேன். க்ரைம் நாவல்களை படிப்பவர்களுக்கு தெரியும் அது எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் சிறுகதைகளை எழுத தொடங்கினேன். ஒன்பதாம்
வகுப்பு படிக்கும் போது எங்களது வகுப்பில் எனது மூன்று சிறுகதைகள்
வாசிக்கப்பட்டது. பிறகு பத்தம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு கல்லூரி என
பிஸி ஆகி அனைத்தும் தற்காலிகமாக நின்றுவிட்டது. சில நேரம் எழுத முயற்சி
செய்ததுண்டு. ஆனால் க்ரைம் நாவல் படிப்பது மட்டும்
தொடர்ந்துகொண்டிருந்தது.
பின்னாளில் ஏதாவது ஒரு புத்தகம் கிடைத்தாலும் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை முழுமையாக படிக்கும் அளவிற்கு மாறிவிட்டிருந்தேன்.
இப்போது வரலாற்று புத்தகங்களை படிப்பதில் அவ்வளவு ஆர்வம். ஈழ தலைவர் பிரபாகரன், பிடல் காஸ்ட்ரோ, நெல்சன் மண்டேலா, ஹிட்லர், சுபாஷ் சந்திர போஸ் போன்ற புத்தகங்களை படித்து புத்தகங்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.
இப்போது வலைப்பூவில் நான்!