வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன்!

Sunday, July 24, 2011

சமச்சீர் கல்வியை தூக்கி குப்பையில் போடுங்கள்!

சமச்சீர் கல்வி!
தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் மாநில அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் ஆகிய பாட திட்டங்களை இணைத்து ஒரே பாடத்திட்டத்தை பின்பற்றும் நோக்கத்துடன் செயல்படவே சமச்சீர் கல்வி.

இதற்கு பல முட்டுக்கட்டைகள்.



 2010 -2011 கல்வி ஆண்டிலிருந்து முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை வழங்கி வருகிறது. இந்த ஆண்டிலிருந்து ஏனைய வகுப்புகளுக்கு வழங்குவதாக திட்டம்.

"அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள சமத்துவ உரிமை கோட்பாட்டின் படி கல்வி அளிப்பதிலும், தரத்திலும் வேறுபாடுகள் இருப்பது அரசியல் சட்டத்திற்கு முரணானது." 

எனவே சமச்சீர் கல்வியை அமல்படுத்த ஆதரவு கொடுப்போம்.
ஆனால் இங்கு சமச்சீர் கல்வியை வைத்து அரசியல் தான் நடந்து கொண்டிருக்கிறது. சமச்சீர் கல்விக்கு எதிராக இருப்பது இழிவான அரசியல் பண்ணும் அரசியல்வாதிகளும், தனியார் பள்ளி முதலாளிகளும் தான்.

எனது பார்வையில்:

சரி! சமச்சீர் கல்வி அமல்படுத்தியாகி விட்டது என்று வைத்துக்கொள்வோம்.
இப்போது மாணவர்களின் கல்வி தரம் உயர்ந்து விடுமா?

நன்றாக யோசித்து பார்ப்போம். 

மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் ஆகிய பாட திட்டங்களை படிப்பவர்கள் அவர்களின் கல்வி தரம் குறைந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள். எந்த பாட திட்டமாக இருந்தாலும் சரி தனியார் பள்ளிகளில் மாணவர்களை நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற செய்துவிடுவார்கள். 

ஆனால் அரசு பள்ளிகளில் பயில்பவர்களின் நிலை?

அரசு பள்ளிகளை பொறுத்த வரையில் உள் கட்டமைப்பு வசதிகளில் வேண்டுமானால்  சில தனியார் பள்ளிகளைக்காட்டிலும் சிறப்பாக இருக்கலாம்.
ஆனால் கல்வி தரத்தில் நிச்சயமாக தொலை தூரத்தில் தான் இருக்கிறார்கள்.

நானும் அரசு மேல்நிலை பள்ளியில் பயின்றதால் சொல்கிறேன். உறுதியாக அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் தரத்தையோ அல்லது பள்ளிகளின் கல்வி தரத்தையோ சமச்சீர் கல்வி உயர்த்தி விடாது. 

அவர்களது தேவையெல்லாம் நல்ல தரமான ஆசிரியர்களும், ஊக்குவிப்புகளும் தான். இந்த சமச்சீர் கல்வி அரசியல் அல்ல.

பல பள்ளிகளில் பல பாட பிரிவிற்கும் ஆசிரியர்கள் இல்லை.

இன்றைக்கும் பெரும்பாலான அரசு பள்ளிகள் இயங்குவது PTA என்றழைக்கப்படும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்படும் ஆசிரியர்களால் தான். இவர்கள் இல்லை என்றால் இன்னும் அவலமே!

இப்படி படித்து முடித்த பிறகு தொழிற்கல்வி போன்றவற்றில் நுழைய இவர்கள் படும் சிரமங்கள் எவ்வளவு?
அப்படியே சேர்ந்தாலும் அவர்கள் படும் கஷ்டங்கள், சவால்கள் என்னென்ன?
யாருக்காவது தெரியுமா?

ஏன்? எதற்கு? :

அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளி கல்வி துறையில் ஏன் இந்த அவலம்?
அடிப்படை தேவையையே பூர்த்தி செய்யாத பள்ளி கல்வி துறை எதற்கு?

இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்துகிறேன் பேர்வழி என்று தனது கவிதைகளை பாட நூல்களில் இணைத்து தற்பெருமை கொள்ளும் முன்னால் முதல்வரை என்னவென்று சொல்ல?
அதேபோல் அரசியல் காரணத்திற்காக மட்டுமே சமச்சீர் கல்வியை எதிர்த்து உயர் நீதி மன்றத்திற்கும், உச்ச நீதி மன்றத்திற்கும் அலையும் இந்நாள் முதல்வரை தான் என்ன வென்று சொல்ல?
இன்று 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் சமச்சீர் கல்வி சிறப்பாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பள்ளி கல்வி துறையில் இருக்கும் மெத்த படித்த மேதைகளெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

இவர்கள் செய்வது இரண்டு விஷயங்கள் தான்.

1 . வாங்கும் சம்பளத்திற்கு விசுவாசமாக இருப்பது (கூழை கும்பிடு போடுவது,
     காலில் விழுவது)
2 . விதியே என்று என்ன செய்தாலும் அவர்களின் பக்கத்தை நியாயப்படுத்துவது.

ஒன்று மட்டும் நிச்சயம்!

சமச்சீர் கல்வியை அமல் படுத்தினால் கல்வி தரத்தில் மிக பெரிய மாற்றம் வந்து விட போவதில்லை. அதேபோல் பொது வழி கல்வியால் கல்வி தரம் குறைந்து விடப்போவதுமில்லை.

இதை பள்ளி கல்வியை தாண்டாத முன்னால் மற்றும் இந்நாள் முதல்வர்கள் தெரிந்து கொள்ளட்டும்.
பல வருடங்களாக மாறி மாறி ஆட்சி புரியும் உங்களால் டிவி, காஸ் அடுப்பு, மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை தான் இலவசமாக கொடுக்க முடியும் என யோசிக்க முடிந்ததா?
அரசு பள்ளிகளில் கற்பிக்கும் தரம், ஆசிரியர்களின் பற்றாக்குறை போன்றவற்றையெல்லாம் யோசித்து திறம்பட செயல்பட முடியவில்லையா?

கீழ் தரமாக அரசியல் செய்வதை விட்டு விட்டு திறம்பட செயல் படுங்கள்!
அப்படி முடியாவிட்டால் சமச்சீர் கல்வியை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு உங்கள் அரசியல் ஆட்டத்தை வேறுபக்கம் ஆரம்பியுங்கள். மாணவர்கள் படிப்பில் விளையாடாதீர்கள்.

சமச்சீர் கல்வியை காட்டிலும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது இப்போது மிக முக்கியம் என்று நினைக்கிறேன்.

அடுத்த பதிவு:
அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தொழிற்கல்வி போன்ற படிப்புகள் பயிலும் போது எதிர் கொள்ளும் சவால்கள்! 

14 comments:

Anonymous said...

முதலில் உண்ணும் உண்வு தான் முக்கியம். உண்வை காஸ் அடுப்பிலும் சமைக்கலாம், கெரோஸின் ஸ்டவ் அல்லது விறகு அடுப்பிலும் சமைக்கலாம்.பசிக்கு ஏதோ ஒரு அடுப்பில் சமைத்து ,அதாவது எந்த அடுப்பு கிடைக்கிறதோ அதை வைத்து சமாளிப்பது போல , சமச்சீர்க் கல்வி என்ற உணவை முதலில் கொடுங்கள். பிறகு விறகு அடுப்பு நிலையில் இருக்கும் பள்ளிகளை காஸ் அடுப்பு நிலைக்கு மாற்றலாம்.‍‍ ‍‍

Anonymous said...

அரசுப்பள்ளிகளில் காலியாகக்கிடக்குமிடங்களையெல்லாம் நிரப்பிவிட்டால், அதாவது ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டால் மட்டுமே அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஈடாகிவிட மாட்டார்கள். சென்னையில் நிறைய அரசுப்பள்ளிகள். அவைகளில் காலியிடங்கள் கிடையா. ஆயினும் மாணவர்கள் தரமென்ன ? ஒரு டொன் போஸ்கோ, ஒரு டிஏவி, ஒரு பிபிஎஸ் மாணவனும் ஒரு அரசுப்பள்ளி ஆங்கில மீடியம் மாணவனும் ஒரே தரமா ? வரமுடியுமா ?

அதே வேளையில், கேந்திரிய வித்யாலாயாவும் அரசுப்பள்ளிகள்தாம். மத்திய அரசுப்பள்ளிகள். அவைகளிலும் ஆசிரியர்கள் காலியிடங்கள் கிடையா. ஆங்கு பயிலும் மாணவர்களுக்கு நம் அரசுப்பள்ளி மாணவர்கள் ஈடாக மாட்டார்.

ஏன்? பிற்புலம். அம்மாணவர்களின் பெற்றோர் அனைவரும் அரசு ஊழியர்கள். அவர்கள் படித்தவர்கள். பிள்ளைகளை நன்கு கவனிப்பார்கள். பள்ளிகள் மட்டுமே அதிசயங்களை நிகழத்திவிடா.

வாழும் சூழ்னிலை, பெற்றொரின் கல்வி, அவர்கள் எண்ணங்கள், இலட்சியங்கள், நல்ல உணவு, உடை, இவையெல்லாம் ஒரு மாணவனின் ஆளுமை நல்லவழியில் கொண்டு செல்லத் தேவை. இவையில்லா கிராமப்புற மாணவர்கள், அல்லது வறுமைக்கோட்டில் வாழும் பட்டணத்து மாணவர்கள் சிறக்க முடியா. அப்படியே சிறந்தாலும் அது பின்னாளில் பிறரைப்பார்த்து தன் முயற்சியால் வரும். அதற்குள் மற்றவர்கள் எங்கோ சென்று விடுவார்கள்.

சமச்சீர் கல்வி மட்டுமல்ல, ஆசிரியர்கள் மட்டுமல்ல - எல்லாமே தேவை பாலாஜி. இல்லாப்பட்சத்தில் அனைத்தும் அப்படியப்படியே இருக்கும்.

ஜோதிஜி said...

வாழும் சூழ்னிலை, பெற்றொரின் கல்வி, அவர்கள் எண்ணங்கள், இலட்சியங்கள், நல்ல உணவு, உடை, இவையெல்லாம் ஒரு மாணவனின் ஆளுமை நல்லவழியில் கொண்டு செல்லத் தேவை. இவையில்லா கிராமப்புற மாணவர்கள், அல்லது வறுமைக்கோட்டில் வாழும் பட்டணத்து மாணவர்கள் சிறக்க முடியா. அப்படியே சிறந்தாலும் அது பின்னாளில் பிறரைப்பார்த்து தன் முயற்சியால் வரும். அதற்குள் மற்றவர்கள் எங்கோ சென்று விடுவார்கள்.

யோசிக்க வைத்த வரிகள்.

Unknown said...

very true!

Ashok said...

உங்க கட்டுரைக்கும் சமச்சீர் கல்விக்கும் என்ன சம்பந்தம்? சமச்சீர் கல்வியை ஆராய்ந்து எழுதிவிட்டு, அதை குப்பையில் போட சொன்னால் ஏற்கலாம். அரசுபள்ளிகளை ஆராய்ந்து எழுதிவிட்டு சமச்சீர்கல்வியை குப்பையில் போடுனு சொன்னா என்ன அர்த்தம்?

Anonymous said...

//
உங்க கட்டுரைக்கும் சமச்சீர் கல்விக்கும் என்ன சம்பந்தம்? சமச்சீர் கல்வியை ஆராய்ந்து எழுதிவிட்டு, அதை குப்பையில் போட சொன்னால் ஏற்கலாம். அரசுபள்ளிகளை ஆராய்ந்து எழுதிவிட்டு சமச்சீர்கல்வியை குப்பையில் போடுனு சொன்னா என்ன அர்த்தம்?
//

I agree. JJ is the one doing Politics in education.

Lovely,

Balaji G said...

// முதலில் உண்ணும் உண்வு தான் முக்கியம். உண்வை காஸ் அடுப்பிலும் சமைக்கலாம், கெரோஸின் ஸ்டவ் அல்லது விறகு அடுப்பிலும் சமைக்கலாம்.பசிக்கு ஏதோ ஒரு அடுப்பில் சமைத்து ,அதாவது எந்த அடுப்பு கிடைக்கிறதோ அதை வைத்து சமாளிப்பது போல , சமச்சீர்க் கல்வி என்ற உணவை முதலில் கொடுங்கள். பிறகு விறகு அடுப்பு நிலையில் இருக்கும் பள்ளிகளை காஸ் அடுப்பு நிலைக்கு மாற்றலாம்.‍‍ //

அனானிக்கு வணக்கம்!
நான் உண்ணும் உணவாக நினைப்பது பள்ளிகளின் தரத்தையே. பள்ளிகளின் தரமே கேள்விக்குறியாக உள்ள நிலையில் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தி விட்டு அவர்களால் தரமான பயிற்சியை எப்படி கொடுக்க முடியும்?

Balaji G said...

@ சிம்மக்கல்
// அரசுப்பள்ளிகளில் காலியாகக்கிடக்குமிடங்களையெல்லாம் நிரப்பிவிட்டால், அதாவது ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டால் மட்டுமே அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஈடாகிவிட மாட்டார்கள் //

நானும் அவ்வாறு சொல்லவில்லை நண்பரே! சமச்சீர் கல்வி எனும் தரமான கல்வியை கொடுப்பதற்கு முன்னால் இதெல்லாம் சரிசெய்யப்பட வேண்டிய காரணிகள் தானே?

// சென்னையில் நிறைய அரசுப்பள்ளிகள். அவைகளில் காலியிடங்கள் கிடையா. ஆயினும் மாணவர்கள் தரமென்ன ? ஒரு டொன் போஸ்கோ, ஒரு டிஏவி, ஒரு பிபிஎஸ் மாணவனும் ஒரு அரசுப்பள்ளி ஆங்கில மீடியம் மாணவனும் ஒரே தரமா ? வரமுடியுமா ? //

உண்மைதான்.இப்போது நீங்கள் கூறுங்கள். சென்னை அரசு பள்ளி மாணவனும் கிராமத்தின் அரசு பள்ளி மாணவனும் ஒரே தரமா? இல்லை தானே?
சென்னை அரசு பள்ளிகளின் தரத்தை போல் கிராமங்களில் கொண்டுவருவது அவ்வளவு கடினமா என்ன?

// ஏன்? பிற்புலம். அம்மாணவர்களின் பெற்றோர் அனைவரும் அரசு ஊழியர்கள். அவர்கள் படித்தவர்கள். பிள்ளைகளை நன்கு கவனிப்பார்கள். பள்ளிகள் மட்டுமே அதிசயங்களை நிகழத்திவிடா. //

தங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.

// வாழும் சூழ்னிலை, பெற்றொரின் கல்வி, அவர்கள் எண்ணங்கள், இலட்சியங்கள், நல்ல உணவு, உடை, இவையெல்லாம் ஒரு மாணவனின் ஆளுமை நல்லவழியில் கொண்டு செல்லத் தேவை. இவையில்லா கிராமப்புற மாணவர்கள், அல்லது வறுமைக்கோட்டில் வாழும் பட்டணத்து மாணவர்கள் சிறக்க முடியா. அப்படியே சிறந்தாலும் அது பின்னாளில் பிறரைப்பார்த்து தன் முயற்சியால் வரும். அதற்குள் மற்றவர்கள் எங்கோ சென்று விடுவார்கள். //
இது நிச்சயமான உண்மை. இதைப்பற்றியே அடுத்த பதிவு என்று குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் இப்போதே சுட்டி காட்டி விட்டீர்கள்.

Balaji G said...

@ ஜோதிஜி
வருகைக்கு நன்றி ஜோதிஜி!
@ தமிழன்
வருகைக்கு நன்றி தமிழன்!

Balaji G said...

@ டான் அசோக்
// உங்க கட்டுரைக்கும் சமச்சீர் கல்விக்கும் என்ன சம்பந்தம்? சமச்சீர் கல்வியை ஆராய்ந்து எழுதிவிட்டு, அதை குப்பையில் போட சொன்னால் ஏற்கலாம். அரசுபள்ளிகளை ஆராய்ந்து எழுதிவிட்டு சமச்சீர்கல்வியை குப்பையில் போடுனு சொன்னா என்ன அர்த்தம்? //

சமச்சீர் கல்வியை காட்டிலும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது இப்போது மிக முக்கியம் என்று நினைக்கிறேன். இதை வைத்து அரசியல் பண்ண வேண்டாம் என்பதே விருப்பமும். அந்த நோக்கில் வைக்கப்பட்டது தான் தலைப்பும்.

Balaji G said...

@ அனானி, கமெண்ட் எண் 6 .
// JJ is the one doing Politics in education. //

ஜெ. மட்டுமில்லை நண்பரே!

Anonymous said...

சமச்சீர் கல்வியை காட்டிலும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது இப்போது மிக முக்கியம் என்று நினைக்கிறேன்....
கீழ் தரமாக அரசியல் செய்வதை விட்டு விட்டு திறம்பட செயல் படுங்கள்!
உங்கள் அரசியல் ஆட்டத்தை வேறுபக்கம் ஆரம்பியுங்கள். மாணவர்கள் படிப்பில் விளையாடாதீர்கள்....

I agree...Well said...

Jayadev Das said...

\\இதை பள்ளி கல்வியை தாண்டாத முன்னால் மற்றும் இந்நாள் முதல்வர்கள் தெரிந்து கொள்ளட்டும்.\\ ம்ம்ம்.... அடடே... யோசிக்கவே இல்லையே, இது உண்மைதானே! அனாலும், படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகள், படிக்காதவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் எனபது போல இது இருக்கிறது, இந்த மனப் போக்கு வேண்டாம். படிப்பறிவே இல்லாத காமராஜர், தமிழகத்தில் கல்விக்காக செய்த சேவை இன்றைக்கும் நிலைத்து நிற்க்கக் கூடியதல்லவா? படிப்பறிவே இல்லாத பல மேதைகள் இன்றைக்கும் இருக்கிறார்கள். படிப்பு என்பது வேறு, திறமை என்பது வேறு. மற்றபடி \\சமச்சீர் கல்வியை காட்டிலும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது இப்போது மிக முக்கியம் என்று நினைக்கிறேன்.\\ இது 100% உண்மை.

N.H. Narasimma Prasad said...

ரொம்ப கோபமாக இந்த பதிவை எழுதியிருக்கிறிர்கள் என்று படிக்கும்போதே தெரிகிறது. கண்டிப்பாக எதிர்காலத்தில் கல்விக்கான தரம் உயரும். அதுவரை காத்திருப்போம்.

Popular Posts