வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன்!

Friday, August 12, 2011

பிரபல / அனுபவ பதிவர்களுக்கு பத்து கேள்விகள்! புது பதிவர்கள் சார்பாக!

தமிழ் வலைப்பதிவர்களுக்கு!

வலையுலகிற்கு புதியவர்களாகிய எங்களைப்போன்றோருக்கு உங்களைப்போல் உள்ள அனுபவம் வாய்ந்த பதிவர்களின் அறிமுகம் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. புதிய பதிவுகளை அவ்வளவாக ஊக்கப்படுத்துவதும் இல்லை. பதிவர் சந்திப்புகளில் எங்களைப்போன்றோருக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாயிருக்கும். அனைவரின் கவனத்தையும் புதிய பதிவர்களின் பக்கம் ஈர்க்கும் ஒரு முயற்சியே இது.

                                                    

பிரபல / அனுபவ பதிவர்களுக்கு பத்து கேள்விகள்!

1 . தொழில்நுட்ப பதிவர்களுக்கு!
  
    கேள்வி: மாங்கு மாங்குனு ஒரே டெக்னிகல் பதிவா எழுதறீங்களே. ப்ளாக் சம்பந்தப்பட்ட பதிவு எழுதும்போது அத ஏன் உங்க ப்ளாக்குக்கு அப்ளை பண்ண மாட்டேங்கறீங்க? (ரொம்ப நாளா இந்த டவுட் இருக்கு!) 

பதில் : யாம் பெற்ற இன்பம் இவ்வய்யகம் பெருக! தெரியாதவங்கலாம் தெரிஞ்சிக்கட்டும். நாங்க எப்ப வேணாலும் அப்ளை பண்ணிக்குவோம்.

[ ஒரு வேளை இப்படி இருக்குமோ?
  தம்பி... இந்த உபதேசம்லாம் ஊருக்கு மட்டும் தான்.]
                                                      
2 . எப்போதும் சூடான இடுகை பகுதியிலுள்ள, அதிக ஓட்டு வாங்கும் பிரபல பதிவர்களுக்கு!

கேள்வி : விடிய விடிய யோசிச்சு எப்படி எப்படியோ திங்க் பண்ணி தலைப்பு வச்சாலும் ஒரு பயலும் எட்டி பாக்க மாட்டேங்கறாங்க. ஆனா நீங்க தலைப்பே வைக்கலேன்னா கூட அடுத்த ஒரு மணி நேரத்துல எல்லாமே கிடைக்குதே எப்படி?

பதில் : இவ்வளவு வருசத்துல நாங்க சம்பாதிச்சது இது தான். எங்க எழுத்துக்கு கிடைச்ச ஒரு சின்ன அங்கீகாரம்.

[ ஒரு வேளை இப்படி இருக்குமோ?
தம்பி! இந்த ஆட்டோ தெரியுமா ஆட்டோ! அனுப்பனுமா? ( 'வர ஓட்ட இவன் கெடுத்துடுவான் போல இருக்கே!' )  ]

3 .  தொடர் பதிவு எழுதும் பதிவர்களுக்கு!

கேள்வி : ஒரு தொடர் பதிவு எழுதிட்டு கடைசியா மூணு பேர சொல்லி அவங்கள எழுத சொல்லறீங்களே. அதுல எங்கள மாதிரி புது பதிவர்களை எல்லாம் கூப்பிடவே மாட்டீங்களா?

பதில் : டைரக்டா ஹீரோ தானா? இந்த பிரண்டு, அமெரிக்கன் மாப்பிளை லாம் வேண்டாமா?

[ இப்படி இருக்குமோ!
நாங்களே என்ன எழுதறதுன்னே தெரியாம இத எழுதிட்டு இருக்கோம். இதுல உனக்கும் பங்கு வேணுமா? ]

4 . திரைப்பட விமர்சனம் எழுதும் பதிவர்களுக்கு!

 கேள்வி: சார்! எப்படி சார் இவ்வளவு தைரியமா எல்லா படத்தையும் டைரக்டா விமர்சனம் பண்ணறீங்க? நல்ல படத்த கூட நார் நாரா கிழிக்கறீங்க?

பதில் : இதுல என்னப்பா இருக்கு! தப்புன்னு தெரிஞ்சா வெளிப்படையா சொல்லறோம். அதே சமயம் தகுதியான படத்தை பாராட்ட நாங்க எப்பவும் தயங்க மாட்டோம்.

                                              

[ இப்படி இருக்குமோ!
ங்கொய்யால! இப்படிலாம் கிழி கிழி கிழிச்சாத்தான் நல்ல பதிவர்னு சொல்லறாங்க! என்னத்த பண்ண? ]

5 . பின்னூட்டங்களுக்கு உடனடி பதில் போட்டும் பதிவர்களுக்கு!

கேள்வி: ஏம்ப்பா! ஒரு கமென்ட் போட்ட அடுத்த அஞ்சாவது நிமிசத்திலேயே ரிப்ளை பண்ணறீங்களே... உங்களுக்கு ஆபீஸ்ல வேற வேலையே இல்லையா?

பதில்: இதெல்லாம் வாசகர்களை அதிகப்படுத்த ஒரு வழிப்பா....

[ இப்படி இருக்குமோ!
எப்பவாவது ஒரு கமென்ட் வரும். அதுக்கு உடனே ரிப்ளை பண்ணினா தான் இன்னும் ரெண்டு பேரு வருவான்... நம்ம பின்னூட்ட கவுண்டும் அதிகமாகும். இதெல்லாம் தெரிஞ்சிக்கோ! தம்பி! ]

6 . பின்னூட்டத்திலேயே சாட், மொக்கை போடும் நண்பர்களுக்கு!

கேள்வி: உங்களுக்கெல்லாம், இந்த G Talk, Yahoo messenger, facebook, buzz அப்படினா என்னனே தெரியாதா?

பதில்: ....................................................

[ இப்படி இருக்குமோ!
உனக்கு Blog Comment Box எதுக்குன்னே தெரியாதா? ]

7 . பதிவுகளை திருடும் திருடர்களுக்கு சாரி பதிவர்களுக்கு!

கேள்வி : இந்த பதிவு மூணு மாசத்துக்கு முன்னாடியே வேற ஒரு ப்ளாக்ல வந்திருச்சே.... 

                                                

பதில்: அப்படியா! Actually இது என் மனசுல பத்து வருசமா ஓடிட்டு இருந்தது... அத இப்போ நான் எழுதியிருக்கேன். அப்புறம் எதோ ப்ளாக்ல வந்ததா சொல்லறீங்களே அதெல்லாம் படிக்கற பழக்கம் எனக்கு கிடையாது. Only English புக்ஸ் தான்.

[ இப்படி இருக்குமோ!
மேல இருக்குற பதிலையே copy , paste பண்ணிக்கோ பா! ]
(இவங்கலாம் ஜென்மத்துக்கும் உண்மையே பேச மாட்டாங்க!)

8 . அரசியல் பதிவெழுதும் பதிவர்களுக்கு!

கேள்வி : ஏன் சார் எப்ப பாத்தாலும் எல்லோரையும் திட்டிட்டே இருக்கீங்க?

பதில் : பின்ன அவனுங்களை புகழ சொல்லறயா? நல்லது ஏதாவது நடக்க விடறாங்களா?

[ இப்படி இருக்குமோ!
Competetion Boss! Competetion.... தீயா உழைக்கனும்.... ]  

9 . பிகர் பற்றி பதிவு எழுதும் பிரபல பதிவர்களுக்கு!

கேள்வி: நீங்க பொண்ணுங்கள பிகர்னு சொன்னா எல்லாரும் கை தட்டறாங்க... ஆனா நாங்கலாம் சொன்னா சமூக விரோதி மாதிரி பாக்கறாங்களே.. அது ஏன்?
( சத்தியமா பதில் எழுத தெரில )

                                                              

10 . தலைப்பிற்கும் பதிவிற்கும் சம்பந்தமே இல்லாமல் பெயர் வைக்கும் பதிவர்களுக்கு!

கேள்வி: உங்க பதிவும், நீங்களும் பிரபலமாகணும்னு நினைக்கறீங்க... சரியா?

பதில்: அதான் தெரியுதில்ல... அப்புறம் என்ன கேள்வி...  ( No Indirect Answer )


டிஸ்கி:

கடைசியாய் எதற்க்கெடுத்தாலும் டிஸ்கி போடும் பதிவர்களுக்கு!

கேள்வி: ஏம்பா! எல்லா பதிவுக்குமே டிஸ்கி போடறீங்க?

பதில் : இது மட்டும் இல்லேனா எவ்ளோவோ பேர்கிட்ட அடிவாங்க வேண்டி இருக்கும்.

[ பாலாஜி : இது முழுக்க முழுக்க கற்பனையே! நகைச்சுவைக்காக எழுதியதே! யார் மனதையும் புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்!
ஹையா! நானும் டிஸ்கி போட்டுட்டேனே ]


48 comments:

☀நான் ஆதவன்☀ said...

குட் :) விடாதீங்க. பிரபல பதிவர்கள் எல்லார் சட்டைய பிடிச்சும் கேளுங்க :)

settaikkaran said...

தம்பி, நானும் பிரபலமும் கிடையாது; அனுபவ பதிவரும் கிடையாது. வந்ததுக்கு அடையாளமா ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன். ரைட்டு! :-))

maruthamooran said...

NALLAYIRUKKU JEE!
SARIYAANA KELVIGAL:-)NALLAYIRUKKU JEE!
SARIYAANA KELVIGAL:-)

பத்மநாபன் said...

இனி யாரும் தன்னை பிரபலம் சொல்லிக்கமாட்டங்க...

பிரபலங்களின் அலப்பறைகளுக்கு கிடைத்த சரியான கிண்டல்....

மாய உலகம் said...

ஹா ஹா கலக்குறீங்க....கலக்குங்க... தொடர்கிறோம்..வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

அட நம்ம ஆளு... வாங்க பாலாஜி... நானும் உங்கள மாதிரி புது பதிவர்தான்....

Unknown said...

பதிவுலக அனைத்து ரகசியங்களையும் உணர்ந்த, உரைத்த நீரே உண்மையில் பிர"பல" பதிவர்....

Unknown said...

இன்று முதல் "பிரபலங்களை அடிச்சு துவைத்த பிரபல பதிவர்" என்று நீங்கள் அன்போடு அழைக்கப்படுவீர்கள்.

Anonymous said...

kalainjar paanila neengale kelvi kettu neengale padhil sollikkireenga.....

aalunga said...

இப்படி எல்லார் கவனத்தையும் ஈர்ப்பது போல் ஒரு பதிவைப் போட்டு இருக்கீங்க...
பிரபலமாவதற்கு இன்னும் ஒரு வழியோ???

Balaji G said...

@ ☀நான் ஆதவன்☀

வருகைக்கு நன்றி ஆதவன்!

// குட் :) விடாதீங்க. பிரபல பதிவர்கள் எல்லார்
சட்டைய பிடிச்சும் கேளுங்க :) //

சார்! டிஸ்கி படிங்க சார்!

Balaji G said...

@ சேட்டைக்காரன்

வருகைக்கு நன்றி சார்!

// தம்பி, நானும் பிரபலமும் கிடையாது; அனுபவ பதிவரும் கிடையாது. வந்ததுக்கு அடையாளமா ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன். ரைட்டு! :-)) //

உங்க வலைப்பதிவை பார்த்தேன்.... நீங்க உண்மையாலுமே பிரபல / அனுபவ பதிவர் கிடையாதுன்னு நம்பிட்டேன்!

Balaji G said...

@ மருதமூரான்

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்!

Balaji G said...

@ பத்மநாபன்

வருகைக்கு நன்றி சார்!

// இனி யாரும் தன்னை பிரபலம் சொல்லிக்கமாட்டங்க...
பிரபலங்களின் அலப்பறைகளுக்கு கிடைத்த சரியான கிண்டல்.... //

சார்! ஒரு நகைச்சுவைக்காக சொன்னது தான் இதெல்லாம்.... பிரபல / அனுபவ பதிவர்கள் யாரும் தப்பா எடுத்துக்காதீங்க!

Balaji G said...

@ மாய உலகம்

வருகைக்கு நன்றி சார்!

// ஹா ஹா கலக்குறீங்க....கலக்குங்க... தொடர்கிறோம்..வாழ்த்துக்கள் //

தொடர்ந்ததற்கு நன்றி.... நானும் உங்களை தொடர்கிறேன்.

Balaji G said...

@ Philosophy Prabhakaran

வருகைக்கு நன்றி சார்!

// அட நம்ம ஆளு... வாங்க பாலாஜி... நானும் உங்கள மாதிரி புது பதிவர்தான்.... //

அப்படியா! உங்களை ரொம்ப நாளா பார்க்கறேனே சார்!

Balaji G said...

@ பாரத்... பாரதி...

வருகைக்கு நன்றி!

// பதிவுலக அனைத்து ரகசியங்களையும் உணர்ந்த, உரைத்த நீரே உண்மையில் பிர"பல" பதிவர்.... //
// இன்று முதல் "பிரபலங்களை அடிச்சு துவைத்த பிரபல பதிவர்" என்று நீங்கள் அன்போடு அழைக்கப்படுவீர்கள். //

வம்புல மாட்டி விடாதீங்க சார்!

ப.கந்தசாமி said...

ஏனுங்க, நீங்களா புது பதிவரு???????

Balaji G said...

@ Anonymous

வருகைக்கு நன்றி!

// kalainjar paanila neengale kelvi kettu neengale padhil sollikkireenga..... //

ஆனா பதில் எல்லாமே உண்மை தானே!

Balaji G said...

@ ஆளுங்க (AALUNGA)

வருகைக்கு நன்றி!

// இப்படி எல்லார் கவனத்தையும் ஈர்ப்பது போல் ஒரு பதிவைப் போட்டு இருக்கீங்க...
பிரபலமாவதற்கு இன்னும் ஒரு வழியோ??? //

ஒருவேளை இப்படியும் இருக்குமோ!

Balaji G said...

@ DrPKandaswamyPhD

வருகைக்கு நன்றி அய்யா!

// ஏனுங்க, நீங்களா புது பதிவரு??????? //

என்னங்க இப்படி சொல்லி புட்டீங்க! சத்தியமா நான் புது பதிவர் தானுங்கோ!

ராஜ நடராஜன் said...

பின்னூட்டத்துல ஒரு பிரபலத்தையும் காணோம்:)

Good one!

சி.கிருபா கரன் said...

சி பி தொல்ல தாங்க முடியல கில்மா பதிவ போட்டு கொல்லுது....................

ஆமினா said...

தைரியம் தான்....
வீட்டுக்கு எத்தன ஆட்டோ வந்துச்சு?

Balaji G said...

@ ராஜ நடராஜன்
@ கிருபா

வருகைக்கு நன்றி!

Balaji G said...

@ ஆமினா

// தைரியம் தான்....
வீட்டுக்கு எத்தன ஆட்டோ வந்துச்சு? //

இதுவரைக்கும் எதுவும் வரல!

Anonymous said...

ம்..நடக்கட்டும்.பவானிதானா நீங்க..சீக்கிரம் சந்திப்போம்

Balaji G said...

@ ஆர்.கே.சதீஷ்குமார்
வருகைக்கு நன்றி! சதிஷ்! மிக்க மகிழ்ச்சி!

உங்களின் வலைப்பூவில் உள்ள புதிய பதிவர்களுக்கான டிப்ஸ் மிகவும் உபயோகமாக இருந்தது. இதற்காகவே உங்களை பின் தொடர்கிறேன்.
பதிவர்களைப்பற்றிய அனைத்து பதிவுகளும் superb!...

// ம்..நடக்கட்டும்.பவானிதானா நீங்க..சீக்கிரம் சந்திப்போம் //

சந்திப்போம்! ஆனால் நான் இப்போது இருப்பது சென்னையில்...

இந்திரா said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களது வலைதளத்தைப் பகிர்ந்துள்ளேன்.

நேரமிருந்தால் வருகை தரவும்.

http://blogintamil.blogspot.com/2011/08/5.html

sathishsangkavi.blogspot.com said...

Vanga vanga Bhavani ya?

இராஜராஜேஸ்வரி said...

கேள்வி : ஒரு தொடர் பதிவு எழுதிட்டு கடைசியா மூணு பேர சொல்லி அவங்கள எழுத சொல்லறீங்களே. அதுல எங்கள மாதிரி புது பதிவர்களை எல்லாம் கூப்பிடவே மாட்டீங்க//

நீங்களும் எழுத தொடர் பதிவுகள்...

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா
உங்கள் பெயர் காரணம்
உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத மூன்று விஷயங்கள்.
ரெடி.. ஸ்டார்ட்..

இராஜராஜேஸ்வரி said...

ஏனுங்க, நீங்களா புது பதிவரு??????? //

என்னங்க இப்படி சொல்லி புட்டீங்க! சத்தியமா நான் புது பதிவர் தானுங்கோ!//

நான் சத்தியமா ஊமைங்கோ என்று சத்தமாய் புலம்புற மாதிரியே இருக்கே!!

இராஜராஜேஸ்வரி said...

நீங்கள் மூன்று வருடங்களாக பதிவிடும் பிரபல பதிவர்!

நான் வந்து ஒருவருடம் நிறைவடையவில்லை இன்னும்.

மாய உலகம் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

Balaji G said...

@ இந்திரா
// இன்றைய வலைச்சரத்தில் தங்களது வலைதளத்தைப் பகிர்ந்துள்ளேன்.//

நன்றி இந்திரா!

Balaji G said...

@ சங்கவி
// Vanga vanga Bhavani ya? //

ஆமாம் சார்! வருகைக்கு நன்றி!

Balaji G said...

@ இராஜராஜேஸ்வரி
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

// நீங்களும் எழுத தொடர் பதிவுகள்...

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா
உங்கள் பெயர் காரணம்
உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத மூன்று விஷயங்கள்.
ரெடி.. ஸ்டார்ட்.. //

ஓகே.... ஸ்டார்ட் பண்ணிட வேண்டியது தான்...

Balaji G said...

@ மாய உலகம்

// வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் //

வாழ்த்துக்களுக்கு நன்றி!

Admin said...

ஹாஹாஹாஹா.. நல்லா சிரிச்சேன்..

//ப்ளாக் சம்பந்தப்பட்ட பதிவு எழுதும்போது அத ஏன் உங்க ப்ளாக்குக்கு அப்ளை பண்ண மாட்டேங்கறீங்க?//

எல்லாருக்கும் ஒரே விஷயம் பிடிப்பதில்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விருப்பம். அதனால தெரிந்ததை பகிர்கிறோம், பிடித்ததை பயன்படுத்துகிறோம்.

:) :) :)

ப.கந்தசாமி said...

ஏனுங்க, நீங்களா புது பதிவரு, பழைய பதிவர்களையெல்லாம் எடுத்து முழுங்கிடிவீங்க போல இருக்குது!

Balaji G said...

@ Abdul Basith
@ சமுத்ரா
@ DrPKandaswamyPhD

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அணில் said...

பின்னூட்டங்களுக்கு உடனடி பதில் போட்டும் பதிவர்களுக்கு! (be careful!!! நான் என்னைச் சொன்னேன்.)

:)

கேரளாக்காரன் said...

Anonymous kooda thanks solringa superAnonymous kooda thanks solringa super

Jayadev Das said...

ஒரு சில பதிவர்கள், பதிவு போட்ட கொஞ்ச நேரத்திலேயே நூறு, இருநூறு பின்னூட்டங்கள், காத்துகிட்டு இருப்பாங்களே என்னவோ தெரியலை!! ஆனாலும் அந்த அளவுக்கு வளர்வதற்கு எவ்வளவு கஷ்டப் பட்டாங்களோ அவங்களுக்குத் தானே தெரியும்!!

N.H. Narasimma Prasad said...

காமெடி பதிவு செம சூப்பர். பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

நம்புங்க...

நீங்களும் இப்ப பிரபல பதிவர் ஆகிட்டீங்க...வாழ்த்துக்கள்..

(காமெடில பின்னி பெடலெடுக்கறீங்க)

udanz.com said...

please add udanz voting widget to support us.

கும்மாச்சி said...

சேம் ப்ளட்.

Popular Posts