வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன்!

Wednesday, August 24, 2011

வினாடிக்கு 2 பைசா பிச்சையெடுக்கும் தொழில் - Airtel அராஜகங்கள்!

'Airtel நெட்வொர்க் ஐ தேர்ந்தெடுத்ததற்காக பெருமைப்படுகிறேன். அவ்வளவு சிறப்பான சேவை, நெட்வொர்க் கவரேஜ், சூப்பரான ஆபர்கள். ஆஹா! மக்கள் ஏன் மற்ற நெட்வொர்க் ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்?' - இதெல்லாம் நான்கு வருடங்களுக்கு முன்பு....



    
இவங்களோட அராஜகத்துக்கு அளவே இல்லாம இருக்கு இப்போ!

அப்படி என்னதான் பண்ணறாங்க?

1 . கேவலமான கஸ்டமர் கேர் சப்போர்ட்

முன்னாடிலாம் கஸ்டமர் கேர் சப்போர்ட் அவ்வளவு நல்லா இருக்கும். என்ன பேசினாலும் பொறுமையா பதில் சொல்லுவாங்க. நம்ம குறையை தீர்த்து வைப்பாங்க. கஸ்டமர் ஐ தக்கவச்சுக்கிறதுல அக்கறை காட்டுவாங்க.

                                                   
 
ஆனா இப்போ கேவலமா பண்ணறாங்க. எதோ அவங்க கிட்ட நாம ஓசில ஹெல்ப் கேட்கிற மாதிரி behave பன்னறானுங்க. கடனுக்கு பதில் சொல்லறானுங்க. நீ நெட்வொர்க் மாறினா எனக்கு என்ன னு சொல்லாம சொல்லறானுங்க. இதெல்லாம் இவங்களா பன்னறான்களா இல்ல Airtel ல இருந்து வர கட்டளையா னு தெரியல!
 ( போர்டபிளிட்டி apply பண்ணினா அடுத்த நாளே கால் பண்ணி கெஞ்சறானுங்க... அது ஏன்னே தெரியல )

[ இந்த கேவலமான கஸ்டமர் கேர் சப்போர்ட்க்கு காரணம் மிதம் மிஞ்சிய கஸ்டமர்கள் தான். நல்ல பேர் வாங்கியாச்சு... இனிமே எங்கே போய்டுவாங்க அப்படிங்கற திமிர் தான்.. ]

2 . கஸ்டமர் கேர் சப்போர்ட்டில் தில்லு முல்லு

ஒரு நாளுக்கு மூன்று முறைக்கு மேல் கஸ்டமர் கேர்க்கு கால் பண்ணினா அடுத்த இரண்டு வாரங்களுக்கு திரும்ப கால் பண்ணமுடியாது. உடனே பிளாக் பண்ணிடறானுங்க. சில சமயங்கள்ல கால் பண்ணும் போது கொஞ்சம் ஹார்ஷா பேசினா முதல் தடவையே பிளாக் பண்ணிடறானுங்க.

    

[ அட கேன பசங்களா! நாங்க எதுக்குடா மூணு தடவைக்கு மேல கால் பண்ணறோம்? ஏதாவது Issue இருக்கறதாலே தானே? கஸ்டமர் கேர் அத solve பண்ண தானே இருக்கு? ]

3 . ஒரு வினாடிக்கு ௦.2 பைசா பிச்சைஎடுக்கும் தொழில்

மற்ற நெட்வொர்க்களில் கால் சார்ஜ் வினாடிக்கு 1 பைசான்னா இவங்க 1.2 பைசா கேக்கறானுங்கோ........ பிச்சக்கார பசங்க.....

4 . பூஸ்டர் பேக் இல் கொள்ளை

பூஸ்டர் பேக்கை பொறுத்த வரை மற்ற நெட்வொர்க்களோடு ஒப்பிட்டால் எல்லா பூஸ்டர் பேக்களும் இதில் அதிகம் தான். அடிக்கடி விலை மாற்றம் செய்யும் கேவலத்தையும் செய்கிறார்கள்.
சில சாம்பிள்கள்:     
i ) Rs.97 - A2A - 10 பைசா A2O - 50 பைசா - பழைய விலை.
   A2O - 60 பைசா - புதிய விலை.
ii ) Rs.197 - 3 Months validity - பழையது.
     Rs.225 - 3 Months Validity - புதியது.
இப்படி எல்லா பேக் களிலும் கொள்ளை.

5 . மெசேஜ் இல் பிச்சை

Rs . 197 க்கு பூஸ்டர் பேக் activate பண்ணினா 3 Months Validity யோட Unlimited மெசேஜ் எல்லா நெட்வொர்க் க்கும் ப்ரீயா அனுப்பலாம். ஆனா இப்போ அதை Limited ஆக்கி A2A மட்டும் ப்ரீ... A2O மொபைல்க்கு 1 மெசேஜ் க்கு 10 பைசா பிச்சையா போட சொல்லறானுங்க.

6 . GPRS இல் மாற்றம்

Rs.98 க்கு recharge பண்ணினா 2GB - 1 Month Validity - பழையது.
1GB - 1 Month Validity - புதியது.
2GB வேணும்னா Rs.149 க்கு Recharge பண்ணனும் இப்போ.

7 . சர்வீஸ் மெசேஜ் மூலம் திருட்டு

இதன் மூலம் இவங்களே ஏதாவது ஒரு சர்வீஸ் activate பண்ணி விட்டுட்டு Rs.10, 15, 20, 30 ன்னு   இஷ்டத்துக்கு திருடறாங்க.. 

8 . உச்ச கட்ட திருட்டு ( இது சொந்த அனுபவம் )

நான் எப்போதும் Full Talk Time இல் Rs.333 க்கு கிரெடிட் கார்டு மூலம் Recharge பண்ணுவேன். இதன் மூலம் GPRS மாதத்திற்கு சில சமயங்களில் 2 முறை activate செய்ய வசதியாக இருக்கும்.
                                                             

Top Up செய்து GPRS வழியாக இன்டர்நெட் Access பண்ணிக்கொண்டு இருக்கும்போதே மெசேஜ் வரும்.
' Thanks for download 'this & that' game through Airtel Live. You have been charged Rs.99 for 'this & that' game'
இது மாதிரி இரண்டு நிமிட இடைவெளியில் 2 மெசேஜ் வந்துவிடும். கடுப்பாகி உடனே கஸ்டமர் கேர் க்கு கால் பண்ணினால் பயங்கரமா சமாளிப்பானுங்க....

" சார்! நீங்க Airtel Live வழியா ddownload பண்ணி இருக்கீங்க"
" ஹலோ! நான் Airtel Live சர்வீஸ்யே delete பண்ணிட்டேன். மொபைல் ஆபீஸ் மட்டும் தான் Use ல இருக்கு"

கடைசியாக 72 மணி நேரத்தில் சரி செய்துவிடுவாதாக சொல்லுவார்கள்.

மீண்டும் கத்தினால் அடுத்த பத்து நிமிடங்களில் எடுத்த balance ஐ திரும்ப சேர்ப்பார்கள்.

இவ்வாறாக கடந்த 6 மாதங்களில் சுமார் 700 ரூபாய் வரை எடுத்திருக்கிறார்கள்.

நான் அனைத்தையும் திரும்ப பெற்றிருக்கிறேன். ஒரு பைசா விட்டதில்லை. இதில் கொஞ்சம் ஏமாந்தால் நம்ம காசு கோவிந்தா தான்!
   
போர்டபிளிட்டி apply பண்ணினேன். இதில் எனக்குள்ள பிரச்னை என்னவென்றால் என்னுடைய சிம் வேறு யாரோ ஒருவரது பெயரில் உள்ளது. அதனால் மாற்ற இயலவில்லை.

ஒரு பெரிய டவுட்!

இவங்க தான் இப்படியா? இல்ல எல்லோருமே இப்படிதானா?

யார் நல்ல Service Provider?
Booster Pack + GPRS க்கு எது better? ப்ளீஸ் சொல்லுங்க!


37 comments:

Anonymous said...

I m using Uninor. and if i recharge Rs198 i can talk around 33 hrs U2U and around 12hrs U2O services/month. And if i recharge booster pack within 30 days i.e recharge on 30th day(Uninor call us b4 one or two days for remember this) our balanced talk time will carry forward to next month. Like this Right now i m having 35hrs U2O and 130hrs U2U. And some times they give offer if we recharge Rs198 they will give assure gift Rs50-Rs500 talk time within 48 hrs.. i got many times Rs100 talk time. And u can recharge by urself by ur mobile using *222*7*(amount)#

ramalingam said...

நான் வோடாஃபோனில் இருந்து ஏர்டெல்லுக்கு மாறலாம் என்று இருந்தேன். இப்படி குண்டைத் தூக்கிப் போடுகிறீர்களே? எவனுமே நல்லவன் இல்லையா!

அன்புடன் அருணா said...

oruthanum uruppadi illai.......

Anonymous said...

நல்லா எழுதியிருக்கீங்க...

நாய் நக்ஸ் said...

இவனுங்களை அவங்க பாணிஇலேஏ திருப்பி அடிங்க ---இப்படி ----http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_10.html

இட்ஸ் வோர்கிங் ...நான் அதையே செய்கிறேன்

Anonymous said...

idea sim use பண்ணுங்க. எந்த பூஸ்டர் பேக்கும் போடாமலேயே ரோமிங்குக்கு 50 பைசா தான் சார்ஜ் பண்றாங்க. GPRS க்கு 98 ரூபாய் போட்டால் 20 ரூபாய் TALKTIME தராங்க. 3GB வரைக்கும் USE பண்ணிக்கலாம். சிக்னல் ரொம்ப நல்லா இருக்கு. நான் Airtel நெட்வொர்க்ல இருந்து 6 மாசம் முன்னாடி மாத்தினேன். இதுவரை வேற கம்பனிக்கு மாத்தணும்னு எனக்கு தோனல. ரொம்ப நல்லா இருக்கு ஐடியா நெட்வொர்க் சர்வீஸ். ஒரு தடவ use பண்ணி பாருங்க. கண்டிப்பா பிடிக்கும்.

gonzalez said...

hello boss,

i faced the same situation with airtel...one day they looted 384rs sending me message that you have downloaded games... phone panni keyta thimura phone cut panranunga...i left the airtel for good and having aircel...which is much better.

THOSE PEOPLE WHO READING THIS NEVER EVER RECHARGE YOU AIRTEL FOR MORE THAN 50RS...I ONCE RECHARGED FOR 200RS FULL TALK TIME THEY SENT ME MESSAGE SAYING I DOWNLOAD THE GAME AND LOOTED ALL THOSE 200RS FROM MY ACCOUNT.

GPRS KUDA WORST AIRCEL LA WAP FREE AND DWNLOAD LIMIT 2GB THAT TOO IN DESKTOP... BUT THIS AIRTEL IS UTTER BULLSHIT.

Anonymous said...

Use BSNL for GPRS - 98 (3GB free).,BOOSTERS - 61 - 30PS TO ALL. 99- BSNL - 10PS & OTHERS - 50PS.

rajan said...

video con sim nalla network 55 rs ku recharge panina 105 rs talk time kidaikyuthu athanala videocon sim edunko

Anonymous said...

better BSNL ONLY OTHERS THIEF.

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வு.

OBC RESERVATION said...

The best BSNL only BSNL

போத்தி said...

I used Airtel for almost 7 years. Moved to BSNL just because of GPRS. Not sure about the Booster Packs in BSNL. I check emails multiple times a day. The minimum charge in BSNL is only 2 paisa for GPRS. Never had to subscribe to monthly packs.

Anonymous said...

I had same such issues with bloody airtel. I have filed a post in the following link. Alari adichu phone panninanunga.

http://www.consumercomplaints.in/

Anonymous said...

நல்ல தமிழ் வார்த்தைகள் இருக்கும் போது ஆங்கில வார்த்தைகளை குறைத்து எழுத பழகுங்கள்....நன்றி ... நல்ல பதிவு...

Cable சங்கர் said...

இம்மாதிரி ப்ரச்சனைகள் ஒவ்வொரு நெட்வொர்க்கிலும் உள்ளது. இதை கேட்காமல் விட்டால் தான் தவறு.. இல்லாவிட்டால் இக்காரணத்தை சொல்லி அதனால் உங்கள் இணைபபை துண்டிக்கிறேன் என்று சொல்லி வேறு நெட்வொர்க்கு மாறுங்கள்.

lkuganathan said...

@balaji; not only airtel all network providers are same except docomo
docomo; good customer support& all plans are nice
GPRS pack; Rs95=4gb 1 month validity
booster pack=rc36 d to d=1ps/6s; d to o 1ps/2s
i am a aircel customer 2days back but now iam a docomo customer via mnp,it's better

Balaji G said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல!

பின்னூட்டத்தில் பலரும் தங்கள் விருப்பங்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

இவை நிச்சயம் பலருக்கும் பயன்படும்.

இவற்றின் சுருக்கம் இங்கே:

Uninor - Rs. 198 Booster
U2U - around 33 Hrs / Month
U2O - around 12 Hrs / Month

இதில் அடுத்த மாதமும் பூஸ்டர் செய்தால் மீதமிருக்கும் டாக் டைம் அடுத்த மாதத்திற்கும் வரவாக வைக்கப்படுகிறது.

BSNL

GPRS - Rs. 98 - 3 GB / Month
Booster - Rs. 61 - 30P to all Mobile
- Rs. 99 - BSNL2BSNL - 10P , BSNL 2 Other - 50P

Videocon

Topup - Rs. 55 - Rs. 105 க்கு டாக் டைம் கிடைக்கிறது.

டோகோமோ

GPRS - Rs. 95 - 4GB / Month
Booster - Rs. 36 - D2D - 1P/6S, D2O - 1P/2S

இவையனைத்தும் பயன்பாட்டாளர்களின் கருத்துக்களே.

Balaji G said...

@ ramalingam

// நான் வோடாஃபோனில் இருந்து ஏர்டெல்லுக்கு மாறலாம் என்று இருந்தேன். இப்படி குண்டைத் தூக்கிப் போடுகிறீர்களே? எவனுமே நல்லவன் இல்லையா! //

ஏன் நண்பா? வோடபோன் நல்ல இல்லையா? நான் அங்கே வரலாம்னு நினைக்கிறேன்.

ஏர்டெல் ஐ பொறுத்த வரை அது பலருக்கும் பிடிக்கும் தான்....ஆனால் இப்போ தான் இப்பட்டி கடுப்படிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Balaji G said...

@ அன்புடன் அருணா
@ ரெவெரி
@ NAAI-NAKKS
@ gonzalez
@ rajan
@ இராஜராஜேஸ்வரி
@ OBC RESERVATION
@ போத்தி
@ சங்கர் நாராயண் @ Cable Sankar
@ lkuganathan
@ Anonymous 1,7,9,13,14

அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றிகள்!

Balaji G said...

@ Anonymous said..
// நல்ல தமிழ் வார்த்தைகள் இருக்கும் போது ஆங்கில வார்த்தைகளை குறைத்து எழுத பழகுங்கள்....நன்றி ... நல்ல பதிவு... //

இங்கு இப்பதிவிற்கு ஆங்கிலத்தை என்னால் தவிர்க்க இயலவில்லை...... நிச்சயம் எப்போதும் நல்ல தமிழில் எழுதவே முயற்சிக்கின்றேன்.

Aashiq Ahamed said...

சகோதரர் பாலாஜி,

உங்கள் மீது இறைவனின் அமைதி நிலவுவதாக...

நான் சுமார் நான்கு-ஐந்து வருடங்களாக ஏர்டெல் உபயோகித்து சில மாதங்களுக்கு முன்பு தான் mobile portability மூலம் டோகோமோ மாறினேன். வேறென்ன ஏர்டெலின் பணக்கொள்ளை தான் காரணம். போன் பண்ணி "நீங்க நீண்ட நாளைய கஸ்டமர், உங்கள இழக்க விரும்பல, offer தரோம்"னு சொன்னாங்க. ஆனா அந்த offer கூட கொள்ளையடிக்குற offer தான்...உங்க சங்காத்தமே வேண்டாம்னு வந்துவிட்டேன்.

டோகோமோ-வில் 24 ரூபாய்க்கு பூஸ்டர் செய்தால், இரண்டு நொடிக்கு ஒரு பைசா என்று சார்ஜ் செய்கின்றார்கள் (ஒரு மாதத்திற்கு). rs.100-க்கு topup செய்தாலும் நீண்ட நாளைக்கு வருகின்றது. எனக்கு ஓகே. இதுவரை பிரச்சனை இல்லை.

நல்ல விழிப்புணர்வு பதிவு...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

aotspr said...

இது மிகவும் நல்ல விழிப்புணர்வு பதிவு...

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Aathif said...

real one

முனைவர் இரா.குணசீலன் said...

தலைப்பும் அலசலும்....
என்னைப் போன்ற பலரின் மனக்குமுறலாக உள்ளது நண்பா...

முனைவர் இரா.குணசீலன் said...

நான் ஏர்டெல் எண்ணை ரீஜார்ஜ் செய்து 4 மாதங்கள் ஆகிறது...

வரும் அழைப்புகளை மட்டுமே ஏற்கிறேன்.

அவர்கள் தொல்லை எல்லை மீறிப் போனது உண்மைதான்.

எல்லா தனியார் அலைபேசி நிறுவனங்களுமே இப்படித்தான் நண்பா இருக்கின்றன.

ஒருநாள் ஏர் செல் சேவை மையத்திலிருந்து எனக்கொரு அழைப்பு வந்தது.

புதிய சலுகை தருகிறோம் என்று ...

கொடுத்த தொல்லையே போதும் ஆளை விடுங்கடா சாமின்னு திட்டி என் துன்பத்தைப் போக்கிக்கொண்டேன்..

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பா ..

இதோ எனது மனக்குமுறல்..

வாடிக்கையாளர் தொல்லை மையம்.
http://gunathamizh.blogspot.com/2011/07/blog-post_07.html

ப.கந்தசாமி said...

BSNL வாங்க சார், இந்தக் கடுப்பு எல்லாம் இல்லை.

Balaji G said...

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!

இக்கருத்துரைகள் நிச்சயம் சில / பலருக்கு பயன்படலாம்.

பயன்பெறுங்கள்!

Kumaran said...

வரவேற்க தக்க பதிவு, இன்றைக்கு மொபைல் போன் அனைவரும் பயன்படுத்துகிற ஒரு
சாதனமாக மாறிவிட்டது, இந்த நிலையில் படித்தவர்கள் மற்றும் முறையாக உபயோகிக்க
தெரிந்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால், பாமரர்களும் இன்றைக்கு செல் போன் பயன்படுத்துகிறார்கள்
அவர்கள் நிலைமை என்னவென்று நாம் யோசிக்க வேண்டும்
குமார்

சி.பி.செந்தில்குமார் said...

அட , நம்ம ஏரியாக்காரரா? ம் ம் ஓக்கே

பாலாஜி said...

@kumaran

// பாமரர்களும் இன்றைக்கு செல் போன் பயன்படுத்துகிறார்கள்
அவர்கள் நிலைமை என்னவென்று நாம் யோசிக்க வேண்டும் //

நிச்சயமாக!

பாலாஜி said...

@சி.பி.செந்தில்குமார்

// அட , நம்ம ஏரியாக்காரரா? ம் ம் ஓக்கே //

வருகைக்கு நன்றி! சி.பி சார்!

Peraveen said...

Idea is Best!!! Am using for the past 3 months after escaped from airtel!!!

பாலாஜி said...

test

aalunga said...

இதற்குத் தாங்க சொள்றது..

ஆயிரம் தான் ஆனாலும், அரசு சேவை மாதிரி வராது..
உடனே BSNL க்கு மாறுங்க..
அவர்கள் Customer Care அவ்வளவு நன்றாக இல்லை என்றாலும், சேவைகள் அருமை!!
திட்டங்களும் மிகவும் எளிதாக இருக்கும்.. கட்டணங்களும் குறைவு..

இப்படி திருட்டுக்களும் இல்லை!!
(விழாக்காலங்களில் சலுகைகள் கிடையாது என்றாலும், ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே உங்களுக்கு சேதி அனுப்பி நினைவூட்டுவார்கள்!!)

aalunga said...

BSNL அறிமுகப்படுத்தி உள்ள 'நேசம்' சேவை..

ஒரு அழைப்பிற்கு ..
BSNL என்றால் 1 பைசா/ நொடி
பிற சேவைகள் என்றால் 1.2 பைசா/ நொடி

(நீங்கள் வெளிமாநிலங்களில் ( Roaming) இருந்தால் இதனை இரட்டிப்பு செய்யுங்கள்.. அவ்வளவே!!)

இது இணையத்திற்க்கும் பொருந்தும்!

பி.கு: நான் என்றும் நான் பயன்படுத்தாத சேவையைப் பிறருக்கு அறிமுகம் செய்து வைத்ததில்லை!

Popular Posts