வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன்!

Saturday, June 27, 2009

கடைசி நிமிடங்கள்!


"
ஹி இஸ் கவுண்டிங் ஹிஸ் லாஸ்ட் மினிட்ஸ்" (He is Counting his last minutes!)
டாக்டர்
வெங்கடேசன் உதட்டை பிதுக்கினார்.

கட்டிலில் படுத்திருந்த நபர் வயிற்றை பிடித்துக்கொண்டு கத்திக்கொண்டிருந்தார்.
"சிஸ்டர்! இவரோட அப்பாவும் அம்மாவும் வெளில வராண்டால இருக்காங்க. உடனே ரெண்டு பேரையும் வர சொல்லுங்க, மகனை கடைசியா ஒரு தடவை பாத்துக்கட்டும் "

நர்ஸ் யமுனா வேகமாக ICU Unit ஐ விட்டு வெளியில் வந்தாள். இரண்டு நிமிட வேகமான நடை.
வராண்டாவில் அவர்கள் இருவரும் நின்றிருந்தார்கள்.




"ராஜேஷ் சார்! உங்க ரெண்டு பேரையும் டாக்டர் வர சொல்லறார் "

அறுபது வயது மதிக்கத்தக்க ஆணிடம் சொல்லிவிட்டு திரும்பவும் ICU Unit ஐ நோக்கி நடந்தாள்.

அந்த அம்மா கண்ணீரை அடக்க முடியாமல் அழுகையை வெளிவிட ஆரம்பித்தாள்.

"சிஸ்டர்! என்ன மகனுக்கு என்ன ஆச்சு?"

கேட்டுக்கொண்டே நர்ஸ் பின்னால் வேகமாக நடந்தார் வெங்கடேசன்.

நர்ஸ் எதுவும் பதில் சொல்லாமல் நடந்தாள்.

ICU வார்டுக்குள் நுழைந்து டாக்டர் இருந்த அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.

நர்ஸ் யமுனா சடாரென பிரேக் போட்ட மாதிரி நின்றாள். பின்னாலேயே வந்த இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்.

டாக்டர்
வெங்கடேசன் தரையில் விழுந்து கிடந்தார். பார்வை எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தது. அது அவர் உயிர் விட்டிருந்ததை உறுதி செய்தது. கட்டிலில் படுத்து வயிற்றை பிடித்துக்கொண்டு கத்திக்கொண்டிருந்த நபர் இப்போது கட்டிலில் அமர்ந்திருந்தான்.
"ள்ளே வாங்க!" டாக்டர் வெங்கடேசன் சொன்னதும் அறையின் உள்ளே வந்தான் பிரபாகரன்.

" உட்காருங்க மிஸ்டர் பிரபாகரன்!"

"தேங்க்ஸ் சார்!"

"சொல்லுங்க பிரபாகரன்! என்னை பார்த்து பேசனும்னு சொன்னிங்கலாம். என்ன பேசணும்? "

"ஒண்ணுமில்லை டாக்டர்! நான் இங்கே தான் இருக்கனுமா இல்ல வீட்டுக்கு போலாமா டாக்டர்? "

" இல்ல நீங்க எங்களோட கண்காணிப்புல இருக்கறதுதான் நல்லது. அப்போதான் உங்களுக்கும் மன தைரியம் கிடைக்கும். "

" தேங்க்ஸ் டாக்டர்! எனக்கு கேன்சர் இருக்கறதை மறைக்காம என்கிட்டயே சொல்லிட்டீங்க. எவ்வளவோ... "

வெங்கடேசன் இடைமறித்தார்.

" பிரபாகரன்! இது ஒரு டாக்டரோட கடைமை. மறைக்க நினைக்கறதுதான் தப்பு. உங்க அப்பா அம்மாவோட அனுமதியோடதான் உங்ககிட்டயே சொன்னேன் "

" நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன் டாக்டர்? "

" இப்போ உங்களுக்கு குடல் புற்று நோயின் முற்றிய நிலை. வாழ்க்கையின் கடைசி நாட்களை எண்ணிட்டு இருக்கீங்க. இன்னும் ஒரு வாரம், ஒரு மாசம் கூட இருக்கலாம். "

பிரபாகரன் எதோ பேச வாயெடுக்கும் முன் நர்ஸ் ஒருத்தி உள்ளே நுழைந்தாள்.

" டாக்டர்! பேசண்ட் (Patient) மாலினியோட அப்பா உங்களை பார்த்து பேச விரும்பறார் "

" உள்ளே வர சொல்லுங்க! "

" அப்போ நான் அப்புறமா வரேன் டாக்டர் "

பிரபாகரன் எழுந்தான்.

" வேண்டாம்... நீங்க இருங்க... ஒன்னும் பிரச்சனை இல்லை "

வெங்கடேசன் கையமர்த்தினார்.

நடுத்தர வயதில் ஒரு நபர் உள்ளே நுழைந்து வெங்கடேசனை வணங்கினார். வெங்கடேசன் அவரை அமரும்படி பணித்தார். அவர் பிரபாகரனை பார்த்து தயங்கிய படியே உட்கார்ந்தார்.

" நீங்க தாரளமா பேசலாம். அவரை பார்த்து தயங்க வேண்டாம் "

சொல்லிய படியே அவரை பார்த்தார் வெங்கடேசன்.
வந்த நபர் கண்ணீர் துளிகளோடு பேச ஆரம்பித்தார்.

"டாக்டர்! நீங்க மாலினிக்கு ஆபரேஷன் ஐ ஸ்டார்ட் பண்ணிடுங்க. நான் இன்னும் ஒரு வாரத்துல எப்படியாவது பணத்தை கட்டிடறேன். அவ எங்களுக்கு ஒரே பொண்ணு. நீங்க தான் அவளை காப்பத்தனும். "

" மிஸ்டர் ஸ்ரீ தர்! நான் ஏற்கனவே உங்ககிட்ட தெளிவா சொல்லிட்டேன். ஹார்ட் ஆபரேஷன் ஒன்னும் அவ்வளவு ஈஸி இல்லை. ரொம்ப காஸ்ட்லி. இந்த சிட்டி லையே பீஸ் குறைவா வாங்கறது எங்க ஹாஸ்பிடல் தான். ஒன்னும் அவசரம் இல்லை. பொண்ணு அவ்வளவு சீரியஸ் கண்டிஷன்னும் இல்லை. இன்னும் ரெண்டு வாரம் கழிச்சும் பண்ணிக்கலாம். முதல்ல பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. "

" டாக்டர் என் பொண்ணோட........ "

" ஒன்னும் ஆகாது. போயிட்டு வாங்க "

ஸ்ரீ தர் கண்ணீர் துளிகளோடு எழுந்து போனார்.

அவர் போகும் வரை அமைதி காத்த பிரபாகரன் பின்னர் கேட்டான்.

" ஏன் டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க? ஆபரேஷன் ஐ ஸ்டார்ட் பண்ணலாம் தானே டாக்டர்... பாவம் அந்த மாலினி... குட்டி பொண்ணு... ரெண்டு வயசு தான் ஆகுது."

" இல்லை பிரபாகரன்... செண்டிமெண்ட் விசயங்களுக்கு இடம் கொடுக்க கூடாது... அப்புறம் அது காஸ்ட்லி யான ஆபரேஷன் கூட... அவங்களால் அவ்வளவு பணம் கட்ட முடியாது "
" ஒரு வேளைஅவங்களால் பணம் கட்ட முடியலனா? "

"
அவ்வளவு தான் "

" என்ன சார் நீங்களே இப்படி சொல்லறீங்க? ஒரு உயிரை காப்பத்த வேண்டிய நீங்களே இப்படி சொன்ன எப்படி? "
வெங்கடேசன் புன்னகைத்தார்.

பிரபாகரன் தொடர்ந்து கேட்டான்.

" ஏன் சார் சிரிக்கறீங்க? ஆபரேஷன் முடிஞ்ச பிறகு கூட பணம் வாங்கலாமே! ஒரு உயிரை பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது. பணத்துக்காக ஒரு உயிரை பரிச்சிடாதீங்க"

"சரி நீங்க கிளம்புங்க. நானும் வெளி நோயாளிகளை (Out Patient) பார்க்கணும் "

" சார் உயிரோட மதிப்பு எனக்கு இப்போ நல்லா தெரியுது. தயவு செய்து காப்பாத்துங்க ப்ளீஸ்! "

" கிளம்புங்க பிரபாகரன் "

வெங்கடேசன் கோபமாக சொன்னார்.

ரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு மாலை நேரம்.

பிரபாகரன் அறையிலேயே அடைந்து கிடக்க பிடிக்காமல் வராண்டாவில் உலாவிக்கொண்டிருந்தான். காலையில் நடந்த சம்பவம் அவனது மனதில் இன்னும் கனத்துக்கொண்டிருந்தது. இந்த இரண்டு நாட்களில்
இது இரண்டாவது சம்பவம்.அச்சம்பவத்தை நினைத்து பார்த்தான்.

' போன வாரம் சாலை விபத்தில் மிக மோசமாக அடிபட்டு ஹாஸ்பிடலில் சேர்த்திருந்த பக்கத்து அறை இளைஞனை டிஸ்சார்ஜ் செய்து கூட்டிக்கொண்டு போனார்கள். ஆனால் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. பிரபாகரனுக்கு பழக்கமாகியிருந்த நர்ஸ்சிடம் விசாரித்த போது அவள் சொன்னாள்.

" அவங்களால பணம் கட்ட முடியாதுன்னு டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போக சொல்லிட்டார்"

மறுபடியும் பணம். இங்கே உயிரில் பணம் விளையாடுகிறது. இவ்வளவு படித்த டாக்டரிடம் பணப்பேய் பிடித்து ஆட்டுகிறதே! '

நினைவிற்கு மீண்டான்.

ரண்டு வாரம் மெல்லமாக நகர்ந்தது.

இந்த இரண்டு வாரத்தில் சிறுமி மாலினி இறந்திருந்தாள். இது பிரபாகரனை தவிர இந்த ஹாஸ்பிடலில் வேறு யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. தீவிரமாக யோசித்து ஒரு முடிவை எடுத்திருந்தான்.

' போகும் போது ஒரு களையை நீக்கி விட்டு போக வேண்டும்! '

அன்று மாலை!

"ஐயோ அம்மா வயிறு வலிக்குதே... வலி உயிர் போகுதே "

பிரபாகரன் கதறினான். அவனது அம்மா டாக்டரிடம் அறையை நோக்கி ஓடினாள். அதற்குள் பிரபாகரனின் அப்பாவும் வந்து சேர்ந்திருந்தார். சில நிமிடங்களில் ஸ்ட்ரெச்சர் வந்தது. ICU Unit க்குகொண்டு போனார்கள்.

வெங்கடேசனும் நர்ஸ் யமுனாவும் ICU Unit க்கு உள்ளே வந்தார்கள். வெங்கடேசன் பிரபாகரனின் உடல் நிலையை பரிசோதித்தார்.
"ஹி இஸ் கவுண்டிங் ஹிஸ் லாஸ்ட் மினிட்ஸ்" (He is Counting his last minutes!)
டாக்டர்
வெங்கடேசன் உதட்டை பிதுக்கினார்.

கட்டிலில் படுத்திருந்த
பிரபாகரன் வயிற்றை பிடித்துக்கொண்டு கத்திக்கொண்டிருந்தார்.

"சிஸ்டர்! இவரோட அப்பாவும் அம்மாவும் வெளில வராண்டால இருக்காங்க. உடனே ரெண்டு பேரையும் வர சொல்லுங்க, மகனை கடைசியா ஒரு தடவை பாத்துக்கட்டும் "

யமுனா கதவை திறந்து கொண்டு வெளிய சென்றாள்.அதுவரை கத்திக்கொண்டிருந்த பிரபாகரன் சட்டென்று கத்துவதை நிறுத்தினான்.வெங்கடேசன் ஆச்சரியமாக பார்த்தார்." என்ன டாக்டர் பார்க்கறீங்க? என்னடா இவன் கத்தாம அமைதியாகிட்டானேனு பார்க்கறீங்களா?இந்த மாதிரி ஒரு வாய்ப்புக்காக தான் காத்திட்டு இருந்தேன்."வெங்கடேசன் புரியாமல் விழித்தார்." விலை மதிக்க முடியாத உயிரை காப்பத்த வேண்டிய நீங்க பணத்துக்கு அடிமையாகிட்டீங்க. உயிரோட மதிப்பு உங்களுக்கு தெரியல. இப்போ தெரிய வைக்கறேன். "வெங்கடேசன் சிரித்தார்." என்ன மிரட்டறியா? "" இல்லை... உயிரை பறிக்க உரிமை இல்லாத நீங்கள் எப்படி உயிரை பரிசீங்களோ அப்படியே நானும் உங்களுக்காக சட்டத்தை கையில் எடுக்கறேன். இனிமேலும் நீங்க இருந்தா டாக்டர் தொழிலுக்கே அவமானம்... எந்த ஒரு அரசியல் சட்டமும் உங்களுக்கு தண்டனை கொடுக்காது. அதை நானே கொடுக்கறேன் "சொல்லிக்கொண்டே பாய்ந்து வெங்கடேசனின் கழுத்தில் கையை போட்டு இறுக்கினான். அசுர பலத்தைக்கொடுத்து இறுக்கினான். அவரது திமிறல் எதுவும் எடு பட வில்லை.நாற்பது வினாடிகள்.கையை கழுத்திலிருந்து எடுத்தான். வெங்கடேசன் தரையில் விழுந்தார்.பிரபாகரன் கட்டிலில் அமர்ந்தான்.அடுத்த நிமிடத்தின் ஆரம்பத்தில் கதவை திறந்து கொண்டு யமுனா, பிரபாகரனின் அம்மா, அப்பா மூவரும் உள்ளே நுழைந்தார்கள்.அனைவரும் உறைந்து நின்றார்கள்...

1 comment:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்களுக்கு விருது வழங்கியுள்ளேன். எனது தளத்தில் வந்து பெற்றுக் கொள்ளவும்

Popular Posts